துஷார் வெள்ளப்பள்ளியை காப்பாற்றவும்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் கடிதம்

துஷார் வெள்ளப்பள்ளியை காப்பாற்றவும்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் கடிதம்
துஷார் வெள்ளப்பள்ளியை காப்பாற்றவும்: அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள முதல்வர் கடிதம்

துஷார் வெள்ளப்பள்ளியின் கைது விவகாரத்தில் தலையிட்டு உதவி செய்யும்படி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். 

கேரளாவில் பாரத் தர்ம ஜனசேனா தலைவராக இருப்பவர் துஷார் வெள்ளப்பள்ளி. கடந்த மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இந்த கூட்டணியின் கேரள அமைப்பாளராகவும் அவர் உள்ளார். இவர் ஐக்கிய அரபி எமிரேட்ஸில் உள்ள அஜ்மானில் கட்டுமான தொழில் செய்து வந்தார். 10 வருடத்துக்கு முன், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் விற்றுவிட்டார். 

இதில், நஸில் அப்துல்லா என்பவருக்கு ரூ.19 கோடி தரவேண்டியது இருந்ததாம். இவரும் கேரளாவைச் சேர்ந்தவர். இதற்காக துஷார் தேதி குறிப்பிடாத காசோலை ஒன்றை கொடுத்தார். ஆனால், அந்த காசோலை பணமின்றி திரும்பி வந்தது. நஸில் அப்துல்லா, இதுதொடர்பாக பேச வருமாறு, துஷாரை அஜ்மானுக்கு அழைத்தார். அதன்படி நேற்று அங்கு சென்றார் துஷார். ஓட்டல் ஒன்றில் பண விவகாரம் தொடரபாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்படாததால், அஜ்மான் போலீசில், நஸில் அப்துல்லா புகார் செய்தார். அவரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். 

இந்நிலையில் துஷார் வெள்ளப்பள்ளியின் கைது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “ஐக்கிய அரபு நாட்டில் துஷார் வெள்ளப்பள்ளி கைது செய்யப்பட்டதாக செய்தி தளங்களின் மூலம் அறிந்தேன். அவருடைய தற்போதைய நிலை குறித்து அறியமுடியவில்லை. ஆகவே துஷாருக்கு தேவையான சட்டரீதியான உதவி செய்யவேண்டும். அத்துடன்  இந்த விவகாரத்தில் வெளியுறவுத்துறை தலையிட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

இந்தக் குற்றம் பொருளாதாரம் தொடர்பான குற்றம் என்பதால் வழக்கு வாபஸ் பெறப்பட்டால் அல்லது இருவரும் சமரசம் அடைந்தால் மட்டுமே துஷாரை சிறையிலிருந்து விடுவிப்பது சாத்தியமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com