டிரம்ப், வெள்ளை மாளிகை
டிரம்ப், வெள்ளை மாளிகைpt web

வெள்ளை மாளிகையில் சீறிப்பாய்ந்த கார்., ஆடிப்போன அமெரிக்க அதிகாரிகள்... டிரம்பின் உயிருக்கு ஆபத்தா ?

அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் உள்ளே இருக்கும் போதே அதி வேகத்தில் கார் ஒன்று வெள்ளை மாளிகையை நோக்கி சென்று கொண்டிருந்தது.. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நடந்த சம்பவம் தான் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Published on
Summary

அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையின் உள்ளே இருக்கும் போதே அதி வேகத்தில் கார் ஒன்று வெள்ளை மாளிகையை நோக்கி சென்று கொண்டிருந்தது.. கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நடந்த சம்பவம் தான் பாதுகாப்பிற்காக நின்று கொண்டிருந்த அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது... அங்கு நடந்தது என்ன என்பதைப் பார்க்கலாம்.

அமெரிக்காவில் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.. இதில் குறிப்பாக, அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய நபர்களை நாடு கடத்தினார். அதேபோல, பல்வேறு நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்து அதிர்ச்சி கொடுத்தார். விசா விவகாரத்திலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு உலகநாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்ரம்ப்

அதே சமயம், ரஷ்யா- உக்ரைன் போர்.. இஸ்ரேல் - ஹமாஸ் போர் உள்ளிட்ட நாடுகளின் போர் நிறுத்த விவகாரத்தில் தலையிட்டு வந்தார் அதிபர் டிரம்ப். இதனால், அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.. சமீபத்தில், அமெரிக்காவின் பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில், டிரம்ப் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.

டிரம்ப், வெள்ளை மாளிகை
சபரிமலை | இறங்குதளத்தில் சிக்கிய குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர்.. தள்ளிய வீரர்கள்! நடந்தது என்ன?

அதே போல கடந்த ஆண்டு பென்சில்வானியாவில் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில், அவரது காதில் பலத்த காயம் ஏற்பட்டது. ஒருமுறை, கோல்ப் மைதானத்தில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் பாம் பீச் சர்வதேச விமான நிலையத்தின் அருகே, துப்பாக்கி ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததை FBI அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.இதனால் டிரம்ப் மீதான கொலை முயற்சி முறியடிக்கப்ட்டது. இந்த நிலையில், அடுத்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது..

வெள்ளை மாளிகை முன் சென்ற கார்
வெள்ளை மாளிகை முன் சென்ற கார்pt web

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை உச்சகட்ட பாதுகாப்பு கொண்ட வளாகம். 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் காணப்படும் வெள்ளை மாளிகையில் வழக்கம் போல் டிரம்ப் அலுவலக பணியயை மேற்கொண்டிருந்தார். அப்போது, வெள்ளைமாளிகையை நோக்கி அதி வேகத்தில் வந்த கார் ஒன்று, வெள்ளை மாளிகையின் வாயில் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டு தடுப்புகள் பலத்த சேதமடைந்தன..

டிரம்ப், வெள்ளை மாளிகை
வெளுத்து வாங்கும் மழை: தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று ரெட் அலர்ட்..?

உடனடியாக அங்கு விரைந்து சென்ற பாதுகாப்புபடை அதிகாரிகள் அந்த இடத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதே சமயம் கார் ஓட்டி வந்த நபரை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையடுத்து, வெள்ளை மாளிகையை சுற்றியுள்ள சாலைகளில் தற்காலிகமாக போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. வெள்ளை மாளிகையின் மீது காரை மோதிய நபர் யார் ? அவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் ? டிரம்பை கொலை செய்ய திட்டம் தீட்டப்படதா?... என்பது குறித்து பல்வேறு கோணங்களில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. திடீரென வெள்ளை மாளிகையின் மீது கார் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப், வெள்ளை மாளிகை
’கடைக்காரரிடம் நான் விக்ரம் மகன் என்றேன்!..’ - துருவ் சொன்ன குட்டி ஸ்டோரி | Bison | Dhruv | Vikram

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com