''உடனடியாக போரை நிறுத்த வேண்டும்'' ஐநா பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

காஸாவில் உடனடியாக மனிதாபிமான போர் நிறுத்தம் அமல்படுத்த வேண்டும் என்று ஐநா சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
un security council
un security council file image

ஆக்கிரமிப்பு தொடர்பான போரில் இஸ்ரேல் - காஸா இடையே 20 நாட்களையும் கடந்து போர் நீடித்து வருகிறது. இதில் இஸ்ரேல் தரப்பில் சுமார் 1,400 பேர் பலியான நிலையில், காஸா நகரையே ஏவுகணை தாக்குதலால் உருக்குலைத்து வருகிறது இஸ்ரேல். இதனால் போரில் இதுவரை சுமார் 8,000 பாலஸ்தீனியர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் இஸ்ரேல் - ஹமாஸ் விவகாரத்தில் இரண்டு வாரங்களாக தீர்மானங்கள் ஏதும் கொண்டுவர முடியாத நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க ஐநா பொதுச்சபையில் அவசர கூட்டம் நடைபெற்றது.

un security council
உலகத்தோடு காசாவிற்கு இருந்த தொலை தொடர்பு அறுபட்டது - உக்கிரமான தாக்குதலில் இஸ்ரேல்!!

இதில், மனிதாபிமான போர் நிறுத்தத்தை வலியுறுத்தி அரபு நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில், இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக திருத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்காவின் ஆதரவுடன் கனடா வலியுறுத்தியது.

ஆனால், கனடாவின் தீர்மானத்துக்கு ஆதரவாக 55 நாடுகளும், எதிராக 88 நாடுகளும் வாக்களித்த நிலையில் 23 நாடுகள் தீர்மானத்தை புறக்கணித்தன. திருத்தத்தை செயல்படுத்த போதுமான பெரும்பான்மை இல்லாததால், கனடாவின் தீர்மானம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து காஸாவில் உடனடியாக போரை நிறுத்தும் தீர்மானம் ஐநா சபையில் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 120 நாடுகளும், எதிராக 14 நாடுகளும் வாக்களித்த நிலையில், 45 நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தீர்மானத்தின் மீது 113 நாடுகள் பேச இருந்த நிலையில், அவசரம் கருதி பாதியிலேயே வாக்கெடுப்பு நடைபெற்றது.

இந்த தீர்மானத்தில், சர்வதேச மனித உரிமை சட்டங்களை மதித்து, பொதுமக்களையும், பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் பாதுகாக்க வேண்டும். அத்தியாவசிய பொருட்களை காஸாவிற்குள் அனுமதிக்க வேண்டும். பாலஸ்தீன குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

un security council
உலகத்தோடு காசாவிற்கு இருந்த தொலை தொடர்பு அறுபட்டது - உக்கிரமான தாக்குதலில் இஸ்ரேல்!!

ஐநா பாதுகாப்பு சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் சட்ட அங்கீகாரம் பெற்றவை. அவற்றை உறுப்பு நாடுகள் அமல்படுத்த வேண்டியது கட்டாயம். ஆனால், இந்த சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை செயல்படுத்த வேண்டியது கட்டாயமில்லை. இருந்தபோதும், இந்த தீர்மானங்கள் ஒட்டுமொத்த நாடுகளின் கருத்தை பிரதிபளிக்கிறது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com