The Rise Of Hunter Style Lovers In Chinas Dating
model imagemeta ai

Gen Z தலைமுறையினரின் 'Hunter style lover'.. சீனாவில் ட்ரெண்டிங்!

சீனாவில் Hunter-style lover என்ற டேட்டிங் முறை தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
Published on

சீனாவின் சமீபத்திய ஜெனரல் இசட் டேட்டிங் ட்ரெண்டாக Hunter-style lover உள்ளது. சீனாவில், இந்த டேட்டிங் முறையைத் தவிர, ஷ்ரெக்கிங், பேங்க்ஸிங், யாப்-ட்ராப்பிங், நானோஷிப், மெத்தை உள்ளிட்ட வேறு சில டேட்டிங்குகளும் ஜென் இசட் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.

நாட்டின் முன்னேற்றம் இன்று ‘ஜென் இசட்’ (Gen Z) தலைமுறைகளின் கைகளில் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதனால்தான் அவர்கள் ’மாடர்ன் தலைமுறையினர்’ என்றழைக்கப்படுகின்றனர். தவிர, அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களினால் சில நாடுகளில் அரசியலில் மாற்றமே நிகழ்ந்துள்ளது. மனித சமூகத்தைப் பிறந்த ஆண்டுகளின் அடிப்படையில் ஆய்வாளர்கள் தலைமுறைகளாக வகைப்படுத்துகின்றனர். அந்த வகையில், 1997 மற்றும் 2012க்கு இடையில் பிறந்த இளைய தலைமுறையினரே இந்த ஜென் இசட் எனக் குறிக்கப்படுகின்றனர். இவர்கள் அரசியல் ரீதியாக மட்டுமல்ல தொழில்நுட்பம், வாழ்க்கை முறை உள்ளிட்டவற்றிலும் பல புதுமைகளைப் புகுத்தி வருகின்றனர். குறிப்பாக, அரட்டையடிக்க உதவும் சாட்டிங்கில் வார்த்தைகளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதுதான் இவர்களுடைய ஃபேஷனாக இருக்கிறது. அதாவது, குட் மார்னிங், குட் நைட் போன்ற வார்த்தைகளை ‘Gm’, ‘Gn’ எனச் சுருக்கமாகக் குறிப்பிடுவது போன்று இன்னும் சில வார்த்தைகளையும் அவர் சிக்கனமாகக் குறிப்பிடுகிறார்கள்.

The Rise Of Hunter Style Lovers In Chinas Dating
model imagemeta ai

இந்த நிலையில், சீனாவில் Hunter-style lover என்ற டேட்டிங் முறை தற்போது ட்ரெண்டாகி வருகிறது. அன்பை எளிய முறையில் உணர்வுபூர்வமான பரிசுகள் மற்றும் செயல்கள் மூலம் காட்டுவதை Gen Z தலைமுறையினர் இவ்வாறு அழைக்கின்றனர். இந்த டேட்டிங் முறையில், காதலர்கள் கொடுக்கும் பரிசை அதன் பண மதிப்பைவிட அதற்காக அவர்கள் முயற்சியின் அளவை வைத்து மதிப்பிடுகிறார்கள். அதன் பின்னால் உள்ள சிந்தனை மற்றும் கவனிப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். இதனால் அவர்களின் கூட்டாளிகள் பார்க்கப்படுவதாகவும் பாராட்டப்படுவதாகவும் உணரப்படுகிறார்கள். சீனாவில், இந்த டேட்டிங் முறையைத் தவிர, ஷ்ரெக்கிங், பேங்க்ஸிங், யாப்-ட்ராப்பிங், நானோஷிப், மெத்தை உள்ளிட்ட வேறு சில டேட்டிங்குகளும் ஜென் இசட் மத்தியில் பிரபலமாகி வருகின்றன.

The Rise Of Hunter Style Lovers In Chinas Dating
இந்தியா மீது அணுகுண்டு வீச திட்டமிட்டதா சீனா? அமெரிக்கா தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com