China Reportedly Conducted Nuclear Test in India
ind, chinax page

இந்தியா மீது அணுகுண்டு வீச திட்டமிட்டதா சீனா? அமெரிக்கா தகவல்!

இந்தியாவில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தாக்குதல் நடத்திய சீனா சில நாட்களுக்கு பிறகு அணுகுண்டு சோதனையை செய்து பார்த்ததாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
Published on

இந்தியாவில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தாக்குதல் நடத்திய சீனா சில நாட்களுக்கு பிறகு அணுகுண்டு சோதனையை செய்து பார்த்ததாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தாக்குதல் நடத்திய சீனா சில நாட்களுக்கு பிறகு அணுகுண்டு சோதனையை செய்து பார்த்ததாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. அணு ஆயுத பரவல் தடுப்பு தொடர்பாக ஐநாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இத்தகவலை அமெரிக்க துணை அமைச்சர் தாமஸ் டின்னான்னோ தெரிவித்துள்ளார். எல்லையில் இந்திய படைகளுடன் மோதல் நடந்த 7 நாட்களுக்கு பின் இச்சோதனை நடைபெற்றதாக அவர் கூறியுள்ளார்.

இந்தியாவின் எல்லையில் உள்ள சின்ஷியாங் மாகாணத்தில் இது நடைபெற்றதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் இந்த சோதனை நிலத்துக்கு அடியில் மிக ரகசியமான முறையில் செய்யப்பட்டதாகவும் இதனால் நிலத்தின் மேற்பகுதியில் அதிர்வுகள் ஏற்படாததால் இதை பலராலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அமெரிக்க அமைச்சர் கூறியுள்ளார். இந்தியாவுடன் மோதல் முற்றினால் அணுஆயுத தாக்குதல் நடத்தவும் சீனா தயாராக இருந்தது எனற அதிர்ச்சி தகவல் அமெரிக்க அமைச்சரின் பேச்சில் தெரியவந்துள்ளது.

China Reportedly Conducted Nuclear Test in India
"அருணாச்சல் சீனாவின் பகுதிதான்" - உறுதிபடத் தெரிவிக்கும் சீனா! பாஸ்போர்ட் விவகாரத்தில் நடந்தது என்ன?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com