உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது 

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது 
உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியது 
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
 
 
உலகம் முழுக்க கொரோனா நோய்த் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,430,242 ஆக உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 78,003 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் 447 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. 
 
 
கடந்த 10 நாட்களுக்குப் பின்னர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 500 எண்ணிக்கைக்குக் கீழ் வந்துள்ளது. தற்போது வரை 66 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 363 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இதுவரை 2,240 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
 
 
இந்நிலையில் உலகம் முழுவதும் கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தைத் தாண்டியுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. இதுவரை 3 லட்சத்து 220 பேர் இந்த நோய்த் தொற்றுக்குப் பலியாகியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.
 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com