
இதுகுறித்து பேசிய இஸ்ரேல் பிரதமர் ,” உலகின் மிகவும் ஒழுக்கமான ராணுவம், எங்களுடையதுதான். எங்களை போர் குற்றம் செய்ததாக கூறி யாரும் பாசாங்குத்தனம் செய்ய வேண்டாம்.
காஸா பகுதி முழுவதும் நிலைநிறுத்தப்பட்டுள்ள இஸ்ரேல்
ராணுவத்தினர், பொதுமக்களின் பாதுகாப்புக்கு தேவையான
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சொந்த மக்களையே மனித கேடயங்களாக பயன்படுத்தி ஹமாஸ் படையினர் மனிதகுலத்திற்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது” குற்றஞ்சாட்டி உள்ளார்.
இஸ்ரேல் - ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், காஸா பகுதியில் 7 ஆயிரத்து 600 பேர் வரை உயிரிழந்துள்ளார்கள்.
அதில் 40 சதவீதம் பேர் குழந்தைகள் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கிடையே, காஸா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தங்கள் நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளதால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.