தன்பாலினத் திருமணம் - அங்கீகாரம் வழங்கியது தாய்லாந்து!

தாய்லாந்தில் தன்பாலினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தாய்லாந்து - தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம்
தாய்லாந்து - தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம்முகநூல்

தாய்லாந்தில் தன்பாலினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதாவின் மூலம் எந்த பாலினத்தை சேர்ந்தவரும், திருமணம் செய்யும் போது அவர்களுக்கு சட்ட அங்கீகாரம் கிடைக்கும்.

தன்பாலின இணையர்கள்
தன்பாலின இணையர்கள்கோப்புப்படம்

ஏற்கனவே உள்ள சட்டத்தில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்கள், கணவன் மற்றும் மனைவி வார்த்தைகள் தனிநபர்கள், வாழ்க்கை துணையர்கள் என மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் தன்பாலினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது 415 உறுப்பினர்களில் 400 பேர் மசோதாக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தாய்லாந்து - தன்பாலின திருமணத்துக்கு அங்கீகாரம்
பாகிஸ்தான் | தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

இதன்மூலம் அனைத்து பாலினத்தினருக்கும் சம உரிமைகள் கிடைப்பது சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளது. மேலும், நிதி மற்றும் மருத்துவ உரிமைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகளை இந்த சட்டம் வழங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com