பாகிஸ்தான் | தற்கொலைப்படை தாக்குதலில் 5 சீனர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 5 பொறியாளர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்
பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்ட்விட்டர்

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து, கைபர் பக்துன்குவா மாகாணத்தின் தசு பகுதியில் உள்ள முகாமிற்கு சீன பொறியாளர்கள் வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர்.

பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்
பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்

அப்போது தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆயுதக்குவியலை ஏற்றிக்கொண்டு வாகனத்தில் வந்த தீவிரவாதி ஒருவர், பொறியாளர்கள் சென்ற வாகனத்தின்மீது வேகமாக சென்று மோதி வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்துள்ளார். இந்த தற்கொலைப்படைத் தாக்குதலில், சீன பொறியாளர்கள் 5 பேரும், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஓட்டுநரும் என ஆறு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்
ஈக்வடார் நாட்டில் இளம் பெண் மேயர் சுட்டுக்கொலை - என்ன நடந்தது?

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு, சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுடன் நட்பு பாராட்டி வரும் சீனா, அங்கு மேற்கொள்ளப்படும் உள்கட்டமைப்பு திட்ட பணிகளுக்காக, தங்கள் நாட்டு பொறியாளர்களை பாகிஸ்தானுக்கு அனுப்பிவைத்து வருகிறது.

பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்
பாகிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டு இதே பகுதியில் பேருந்து மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில், சீனாவை சேர்ந்த ஒன்பது பேர் உட்பட 13 பேர்உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com