இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் தொடங்கியது!

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இதுகுறித்த சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...
இஸ்ரேல் - ஹமாஸ்
இஸ்ரேல் - ஹமாஸ்முகநூல்

இஸ்ரேல் ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எட்டு பெண்கள் உட்பட 24 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்துள்ளனர்.

இதேபோல், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 24 பெண்கள் உட்பட பாலஸ்தீனர்கள் 39 பேரை, இஸ்ரேல் அரசு விடுதலை செய்துள்ளது. எகிப்து நாட்டின் ரஃபா எல்லைப் பகுதி
வழியாக, பிணைக் கைதிகள் நாடு திரும்பினர்.

அவர்களுக்கு மருத்துவ சேவை வழங்கிட, எல்லைப் பகுதியில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன. ஹமாஸ் அமைப்பினர் விடுவித்த 24 பிணைக் கைதிகளில், 10 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே, மேலும் தங்கள் வசம் உள்ள பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்கும்பட்சத்தில், போர் நிறுத்தம் மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் தொடங்கி 50
நாட்களை எட்டியுள்ள நிலையில், கத்தாரில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி முதல் முறையாக நான்கு நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ்
காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல்! 30 பேர் உயிரிழப்பு
இஸ்ரேல் ஹமாஸ்
இஸ்ரேல் ஹமாஸ்pt web

இந்த போர் நிறுத்தத்தால், வெடிகுண்டு தாக்குதலும், விமானப்படையினரின் சத்தங்களும், பிணக்குவியல்களும் முதல்முறையாக குறைந்துள்ளதாக காஸாவில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. போர் தொடங்கியது முதல் இதுவரை, 7,200 பாலஸ்தீனர்கள் வரை, இஸ்ரேலில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஹமாஸ் அமைப்பினர் வசம் 240 பேர் பிணைக் கைதிகளாக இருந்ததாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com