\
காசா
காசாமுகநூல்

காஸாவில் பள்ளி மீது இஸ்ரேல் படையினர் தாக்குதல்! 30 பேர் உயிரிழப்பு

காஸாவில் ஐக்கிய நாடுகள் சபை நடத்தி வந்த பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
Published on

ஹமாஸ் படையினரின் தாக்குதலை தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் காஸாவில் இதுவரை 14 ஆயிரத்துக்கும மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வடக்கு காஸா பகுதியில் ஐக்கிய நாடுகள் சபை நடத்திவந்த பள்ளி ஒன்றின் மீது இஸ்ரேலிய ராணுவ படை ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 30 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

இதேபோல் வடக்கு காஸா பகுதியில் உள்ள இந்தோனேஷியன் மருத்துவமனை மீதும் இஸ்ரேலிய ராணுவத்தினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக பாலஸ்தீன அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

காசா
’அம்மாவுக்கு என்னைப் பிடிக்காது’ - எப்போதும் தனிமையில் வாடும் 4 வயது குழந்தையின் கண்ணீர் வீடியோ!

மருத்துவமனையில் 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் குடியிருப்பு ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com