Pavel Durov
Pavel DurovX Page

டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது... என்ன காரணம்?

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் துரோவ், பிரான்ஸ் நாட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Published on

டெலிகிராம் செயலியின் நிறுவனரான பாவெல் துரோவ், அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்து வருகிறார். பிரான்ஸ் நாட்டின் போர்கெட் விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Pavel Durov, Telegram CEO
Pavel Durov, Telegram CEO

டெலிகிராமில் கன்டெண்ட் மாடரேட்டர் (CONTENT MODERATOR) இல்லாதது, அந்த செயலியின் வாயிலாக குற்றச்செயல்கள் எவ்வித தடையுமின்றி நடைபெற வழிவகுத்ததாக பிரான்ஸ் காவல்துறையினர் கருதுகிறது.

Pavel Durov
“ஒரு சமூகத்தின் உயிர்வலி - வாழை” - மாரி செல்வராஜ் வீட்டுக்கே சென்று வாழ்த்திய திருமாவளவன் எம்.பி!

இதுதொடர்பான வழக்கின் விசாரணைக்கு துரோவ் உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என அந்நாட்டு காவல்துறையினர் குற்றஞ்சாட்டினர். பாவெல் துரோவுக்கு ஏற்கனவே கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com