மாரி செல்வராஜை வாழ்த்திய திருமாவளவன் எம்.பி
மாரி செல்வராஜை வாழ்த்திய திருமாவளவன் எம்.பிX Page

“ஒரு சமூகத்தின் உயிர்வலி - வாழை” - மாரி செல்வராஜ் வீட்டுக்கே சென்று வாழ்த்திய திருமாவளவன் எம்.பி!

மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு, மாரி செல்வராஜின் வீட்டுக்கு சென்று பாராட்டி இருக்கிறார் எம்.பி-யும் விசிக தலைவருமான திருமாவளவன்.
Published on

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், மாரி செல்வராஜின்ன் நவ்வி ஸ்டுடியோஸ், ஃபார்மர்ஸ் மாஸ்டர் ப்ளான் ப்ரோடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம், வாழை. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை, ரெட் ஜெயண்ட் மூவீஸ் விநியோகம் செய்கிறது. இப்படம் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 23-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மாரி செல்வராஜை வாழ்த்திய திருமாவளவன் எம்.பி
Vaazhai review | வாழை விமர்சனம் | மாரியின் நினைவிலிருந்து ஒரு வலி மிகு காவியம்!
வாழை படம்
வாழை படம்புதிய தலைமுறை

இந்நிலையில் இப்படத்தை கண்ட எம்.பி திருமாவளவன், மாரி செல்வராஜின் வீட்டுக்கே சென்று மனம் நெகிழ அவரை வாழ்த்தியிருக்கிறார். மேலும் வாழை படம் தொடர்பாக தன் எக்ஸ் தளத்தில் நெகிழ்வுடன் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் எம்.பி திருமாவளவன்.

அதன்படி தன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள எம்.பி திருமாவளவன்,

நாடே கொண்டாடும் "வாழை"!

கண்ணீரில் கருக்கொண்ட காவியம்.

கலையுலகே புருவம் உயர்த்தும் கலைநயம்.

உழைக்கும் மக்களுக்கு வாழைக்குலைகள் மட்டுமல்ல... வாழ்க்கையே பெருஞ்சுமை.

புளியங்குளத்தில் முளைவிட்ட பொதுவுடைமை அரசியலின் தாக்கத்தால் மாரியின் வேர்களில் மார்க்சியம்.

மாரி செல்வராஜை வாழ்த்திய திருமாவளவன் எம்.பி
மாரி செல்வராஜை வாழ்த்திய திருமாவளவன் எம்.பி

‘போதாது கூலி’ என போர்க்குரல் வெடித்தெழும் பொருளியல் முரண் விளக்கும் புரட்சிகரப் படைப்பு!

வறுமையை எதிர்த்து வலிகளைச் சுமந்து வாழ்க்கையைத் தேடும் வரலாற்றுக் குறிப்பு!

விபத்தில்தான் பலி என்றாலும், இது வெண்மணி வெங்கொடுமையின் வேறொரு வடிவம். பச்சிளம் குழந்தை பருவத்திலும் குடல் முறுக்கும் பசியடக்கி கொடுந்துயர தடைநொறுக்கி வெகுண்டெழுந்து போராடி வெற்றி இலக்கை எட்டித் தொட்ட ஒரு பிறவிப்போராளியின் தன்வரலாறு.

இது மாரியின் மழலைப்பருவ வரலாறு எனினும், ஒரு சமூகத்தின் உயிர்வலி!

என்று கூறி நெகிழ்ந்துள்ளார்

மாரி செல்வராஜை வாழ்த்திய திருமாவளவன் எம்.பி
வாழை திரைப்படம் | “மாரியின் மீது பெரும் அன்பு உண்டாகிறது..!” - நெகிழும் திரைப்பிரபலங்கள்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com