\
Former ICC judge Navi Pillai
Former ICC judge Navi PillaiReuters

தமிழ் வம்சாவளிப் பெண்ணுக்கு நோபல் பரிசு! நவநீதம் பிள்ளையின் உலக சாதனை! யார் இவர் ?

மனித உரிமைகளுக்காக போராடிய நவநீதம் பிள்ளை: அமைதிக்கான நோபல் வெற்றி!
Published on: 
Summary

2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, இந்திய தமிழ் வம்சாவளி நீதிபதி நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பாதுகாப்பில் அவர் ஆற்றிய அர்ப்பணிப்பு மற்றும் சர்வதேச சட்டத்தை வலுப்படுத்திய பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் - M. மீரா

2026-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளி நீதிபதி நவநீதம் ‘நவி’ பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சட்டத்தை வலுப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், சமூகத்தில் நீதியை நிலைநாட்டவும் அவர் ஆற்றிய பணிகளுக்காக இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் குழு தெரிவித்துள்ளது.

நவநீதம் பிள்ளை தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில், இந்தியத் தமிழ் வம்சாவளியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். நிறவெறிக்கு எதிராகப் போராடியவர்களுக்காக வழக்கறிஞராகப் பணியாற்றிய அவர், 1967-ம் ஆண்டில் சொந்தமாகச் சட்ட நிறுவனத்தையும் தொடங்கினார். பின்னர், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி பயின்று, 1988-ம் ஆண்டில் சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

1995-ம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 1999-ம் ஆண்டில், (Rwanda) ருவாண்டாவுக்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாகவும் தலைவராகவும் பொறுப்பேற்றார்.

அங்கு பணியாற்றியபோது, பாலியல் வன்முறைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் ஆகியவை மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளில் முக்கியப் பங்கு வகிக்க முடியும் என்பதை நிலைநாட்டுவதில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.

nobel prize
nobel prizereuters

இதைத்தொடர்ந்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகவும் பணியாற்றினார். 2008 முதல் 2014-ம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஆணையராகப் பொறுப்பு வகித்தார்.

மேலும், 2021 முதல் 2025-ம் ஆண்டு வரை ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகள் தொடர்பான ஐ.நா.வின் சுதந்திர சர்வதேச விசாரணைக் குழுவுக்குத் தலைமை தாங்கினார். 2019-ம் ஆண்டில், மியான்மரில் இனப்படுகொலை நடைபெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பான சர்வதேச நீதிமன்ற வழக்கிலும் தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

Nobel Peace prize
Nobel Peace prize Reuters

நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் வரவேற்றுள்ளது. மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் அவர் காட்டிய அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளது.

இந்த விருதுக்காக சுமார் 12 லட்சம் அமெரிக்க டாலர் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. டிசம்பர் 10-ஆம் தேதி நார்வேயின் ஒஸ்லோ நகரில் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

Former ICC judge Navi Pillai
ஹார்முஸில் கண்ணிவெடிகள்.. அடுத்தடுத்து சிக்கும் கப்பல்கள்.. ஈரான் சொல்வது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com