200 ஆண்டுகால பாரம்பரியம் இனி இல்லை.. 32 ஆவது உறுப்பு நாடாக நேட்டோவில் இணைந்த ஸ்வீடன்!

ஸ்வீடன் நேட்டோவின் 32 ஆவது உறுப்பு நாடாக இணைந்துள்ளது.
nato
natopt web

நேட்டோ என அழைக்கப்படும் வட அட்லாண்டிய ஒப்பந்த கூட்டமைப்பானது, மேற்கத்திய நாடுகளின் ராணுவக் கூட்டமைப்பு என்றும் அழைக்கப்படுகிறது. இது ரஷ்யாவுக்கு எதிரான நாடுகளின் கூட்டணியாக கருதப்படுகிறது. இந்தக் கூட்டமைப்பு உருவானபோதே கிழக்கை நோக்கி (அன்றைய சோவியத் யூனியன் தற்போது இல்லை - தற்போது ரஷ்யா) இது விரிவுப்படுத்தப்பட மாட்டாது என்று சோவியத் யூனியனிடம் நேட்டோ நாடுகள் உறுதியளித்தன. ஆனால் சோவியத் யூனியன் உடைந்த பின்னர், அந்த வாக்குறுதியை மீறி ரஷ்யாவுக்கு அருகே இருந்த 10-க்கும் மேற்பட்ட நாடுகளை தன்னுடன் நேட்டோ இணைத்துக் கொண்டது.

நேட்டோவின் கொள்கையின் படி, உறுப்பு நாடுகள் மேல் வேறொரு நாடு தாக்குதல் நடத்துவது என்பது, தங்களின் மேல் நடத்தப்பட்ட தாக்குதலாகவே நேட்டோ நாடுகள் எடுத்துக்கொள்ளும். தாக்குதலுக்கு உள்ளான நாட்டைக் காக்க நேட்டோ கூட்டமைப்பு நாடுகள் ஓரணியில் இணைய வேண்டும்.

nato
’Feb 24, 2022’ - 2 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கும் ரஷ்யா - உக்ரைன் போர்; ஆதிக்கம் செலுத்துவது யார்?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து ஸ்வீடனும், துருக்கியும் நேட்டோ கூட்டமைப்பில் இணைவதற்காக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தின. ரஷ்யா இருநாடுகளையும் எச்சரித்தது. ஆனாலும், கடந்த ஆண்டு ஏப்ரம் மாதம் ஃபின்லாந்து நேட்டோ கூட்டமைப்பில் இணைந்தது. 75 ஆண்டுகால ராணுவ அணிசேரா கொள்கையில் இருந்த ஃபின்லாந்து நேட்டோவில் இணைந்தது உலக அளவில் வியப்பினை ஏற்படுத்தியது.

Ulf Kristersson
Ulf Kristersson

இந்நிலையில், அட்லாண்டிக் ராணுவ கூட்டணியான நேட்டோவில் 32 வது நாடாக ஸ்வீடன் இணைந்துள்ளது. கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்வீடன் ராணுவ நிலைப்பாட்டைத் தவிர்த்து போர்க்காலங்களில் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துவந்த நிலையில், தற்போதைய நகர்வு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது புவியியல் ரீதியாக ரஷ்யாவிற்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. ஏனெனில் ஸ்வீடன் ரஷ்யாவுடன் 1340 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நேட்டோ அமைப்பில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தற்போது நேட்டோவில் இணைந்துள்ளது ஸ்வீடன். ஸ்வீடன் பிரதம மந்திரி உல்ஃப் கிறிஸ்டெர்சன் அமெரிக்க அரசாங்கத்திடன் அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தார்.

இரு நாடுகள் ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்புகளை தெரிவித்துவந்தன. குர்தீஷ் பிரிவினைவாதிகளுக்கு ஸ்வீடன் ஆதரவளிக்கிறது என துருக்கி, ஸ்வீடன் இணைவதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியது. கடந்த ஜனவரி மாதத்தில் இந்த எதிர்ப்பை துருக்கி விளக்கிக்கொண்டது. ஹங்கேரியாவும் ஸ்வீடன் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சில தினங்கள் முன் எதிர்ப்பை திரும்ப பெற்றுக்கொண்டது. இதன் பின் ஸ்வீடனும் நேட்டோவில் 32 ஆவது உறுப்பு நாடாக இணைந்துள்ளது.

இதன்மூலம் ஸ்வீடன், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ நாடுகளின் தளவாட மையமாக மாறுவதற்கான சாத்தியம் உள்ளதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நேட்டோவில் இணைந்தது குறித்து உல்ஃப் கிறிஸ்டெர்சன் கூறுகையில், “ஸ்வீடன் நேற்றை விட இன்று பாதுகாப்பான நாடு. எங்களிடம் நட்பு நாடுகள் உள்ளது. எங்களுக்கு ஆதரவு உள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் இருந்து வரும் அச்சுறுத்தல்கள் குறைவாகும் என நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

nato
நேட்டோ அமைப்பு எப்படி உருவானது? அமெரிக்கா - ரஷ்யா பனிப்போர் சூழல் என்ன? - முழுமையான வரலாறு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com