\
Study Finds 1.5 Million Children Face Online Sexual Abuse
கோப்புபடம்Reuters

ஒரே ஆண்டில் 15 லட்சம் குழந்தைகளுக்கு இணைய வழி பாலியல் சுரண்டல்.. வெளியான அதிர்ச்சி அறிக்கை!!

பாகிஸ்தானில் ஓராண்டில் மட்டும் சுமார் 15 லட்சம் குழந்தைகள் இணையவழிப் பாலியல் சுரண்டல் மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
Published on: 

பாகிஸ்தானில், யுனிசெஃப் (UNICEF) மற்றும் சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போல் இணைந்து நடத்திய ஆய்வில், கடந்த ஓராண்டில், 12 முதல் 17 வயதுக்குட்பட்ட இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகளில் சுமார், 15 லட்சம் பேர் அதாவது, 16 பேரில் ஒருவர் இணைய வழி பாலியல் சுரண்டல் அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது.

குழந்தைகளுக்கு விரும்பத்தகாத பாலியல் படங்கள் மற்றும் உரையாடல்களை அனுப்புவது, அந்தரங்கப் புகைப்படங்களைக் கேட்டு மிரட்டுவது, அவர்களின் அனுமதியின்றிப் புகைப்படங்களைப் பகிர்வது உள்ளிட்ட பல்வேறு வகையான துன்புறுத்தல்கள் இதில் அடங்கும். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி போலியான ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகளை உருவாக்குவதும் புதிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

கோப்புபடம்
கோப்புபடம்Reuters

இந்த ஆய்வில் மேலும் அதிர்ச்சியளிக்கும் தகவல் என்னவென்றால், பதிவான சம்பவங்களில் 85 சதவீதத்தில் குழந்தைகளுக்கு ஏற்கெனவே தெரிந்தவர்களே குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும், பாதிப்புகள் தொடர்பான தகவல்களில் 44 சதவீதம் சமூக வலைதளங்களுடன் தொடர்புடையவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Study Finds 1.5 Million Children Face Online Sexual Abuse
‘என்னால்தான் பெயர் மாறியது..’ - பெருமிதம் பேசிய ட்ரம்ப்.. மறுத்த கூகுள்!

அதேநேரத்தில், அவமானம், பயம் காரணமாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் தெரிவிக்கவில்லை எனவும் காவல்துறை உள்ளிட்ட அதிகாரப்பூர்வ அமைப்புகளிடமும் புகார் அளிக்காத நிலை காணப்படுவதாகவும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இந்தச்சூழலில் தான், இணையவழிக் குற்றங்களைத் தடுப்பதுடன், பாதிக்கப்பட்ட குழந்தைகள் அச்சமின்றிப் புகார் அளிக்கவும், தேவையான பாதுகாப்பையும் உதவியையும் பெறவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Study Finds 1.5 Million Children Face Online Sexual Abuse
நிலவில் மனிதன் கால் பதிக்க உதவிய பெண்.. யார் இந்த மார்கரெட் ஹாமில்டன்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com