கடல் கழிவுகளிலிருந்து மின்சாரக் கார் உருவாக்கிய நெதர்லாந்து மாணவர்கள்; குவியும் பாராட்டு!

கடல் கழிவுகளிலிருந்து மின்சாரக் கார் உருவாக்கிய நெதர்லாந்து மாணவர்கள்; குவியும் பாராட்டு!
கடல் கழிவுகளிலிருந்து மின்சாரக் கார் உருவாக்கிய நெதர்லாந்து மாணவர்கள்; குவியும் பாராட்டு!

நெதர்லாந்து நாட்டில் கடல் கழிவுகளிலிருந்து மணிக்கு 90 கிலோமீட்டர் வேகம் செல்லக்கூடிய மின்சாரக் காரை கண்டுபிடித்து பாராட்டுக்களைக் குவித்துள்ளார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் அதிக மக்கள்தொகை கொண்டது நெதர்லாந்துதான். அதேபோல, முழுக்க நீரால் சூழப்பட்ட நாடுகளில் ஒன்று மட்டுமல்ல. மிகச்சிறிய நாடும்கூட.  கடல் மட்டத்திற்கு மிகவும் கீழே அமைந்திருப்பதால் இந்த நாட்டில் எங்குப் பார்த்தாலும் அணைக்கட்டுகளும் தடுப்புச் சுவர்களும்தான்.

இதனாலேயே இந்நாட்டில் அடிக்கடி வெள்ளப்பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றியும் கடல் இருப்பதால், இந்நாட்டைச் சேர்ந்த ஐந்தோவன் தொழில்நுட்பக் பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்கள் கடலில் கொட்டப்படும் பிளாஸ்டி பொருட்கள், மறுசுழற்சி செய்யப்பட்ட பி.இ.டி பாட்டில்கள், வீட்டுக் குப்பை உள்ளிட்ட கழிவுகளை மறுசுழற்சி செய்து இந்தக் காரை உருவாக்கி இருக்கிறார்கள்.

18 மாதங்களில் வடிவமைக்கப்பட்டஇந்தக் காருக்கு ‘லூகா’ என்று பெயரிட்டுள்ளார்கள். தற்போது, மணிக்கு 90 கிலோ மீட்டர் இயங்கும் இக்காரை முழுமையாக சார்ஜ் செய்தால் 220 கிலோமீட்டர் வேகம் செல்லும். இருவர் பயணம் செய்யலாம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

தொலைக்காட்சிகள், பொம்மைகள், சமையலறை உபகரணங்களில் உள்ள பிளாஸ்டிக்குகள் காரின் மேல் பகுதியிலும், தேங்காய் மற்றும் குதிரை முடிகள் இருக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com