வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டம்pt web

இலங்கை|வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம்... மூன்றாவது நாள் உண்ணாவிரதப் போராட்டம்!

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம் உண்ணாவிரத போராட்டம்.
Published on
Summary

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் சனிக்கிழமை மூன்றாம் நாளாக யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ் செம்மணியில் நடக்கும் இந்தப் போராட்டம் கடந்த 26ம் தேதி ஆரம்பமாகிய நிலையில் செப்டம்பர் 1 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் செயல்பாடுகளை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் குறித்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டம்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டம்pt web

குறித்த போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் அணையா விளக்கு பகுதியில் தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டத்தை ஆரம்பமானது. போராட்டத்தில் கலந்துகொண்டவர்ககள், இலங்கையின் உள்நாட்டு செயல்பாட்டு முறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இனவழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுதந்திரமான விசாரணையை மட்டுமே கோருகின்றோம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் உண்ணாவிரதப் போராட்டம்
உ.பி.|‘ஐ லவ் முகம்மது’ பேரணி.. வெடித்த சர்ச்சை.. எச்சரிக்கை விடுத்த முதல்வர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com