south korean plane crash new report
தென் கொரியா விமான விபத்துஎக்ஸ் தளம்

தென் கொரியா | விமான விபத்துக்கு பறவை காரணமா? புதிய அறிக்கையில் வெளியான தகவல்!

தென் கொரியா விமான விபத்துக்கு, பறவைகள் காரணமாக இருக்கலாம் என புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Published on

தென்கொரியாவைச் சோ்ந்த ‘ஜேஜு ஏா்’ நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737-800 ரக என்ற பயணிகள் விமானம், கடந்த ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி தரையிறங்க முயற்சித்தபோது, விபத்துக்குள்ளானது. 175 பயணிகள், 6 விமானப் பணியாளா்கள் உள்பட 181 போ் இந்த விமானத்தில் பயணித்த நிலையில், விபத்தில் விமானப் பணியாளா் இருவா் மட்டுமே உயிா் தப்பினா். தாய்லாந்திலிருந்து வந்த இந்த விமானம் தரையிறங்கும்போது முன் சக்கரம் செயலிழந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகின.

விமானத்தின் முன்சக்கரத்தின் (லேண்டிங் கியா்) செயல்பாட்டில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, விமானத்தின் மீது பறவை மோதி இதுபோல நடந்து இருக்கலாம் என அப்போதே கூறப்பட்டது. எனினும், அந்த விமானத்தின் கருப்புப் பெட்டியை ஆய்வு செய்தபோது, விபத்திற்குள்ளாவதற்கு 4 நிமிடங்களுக்கு முன்பே, கருப்புப் பெட்டி தரவுகளையும், விமானிகளின் குரலையும் பதிவு செய்வதை நிறுத்தியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், விமானம் விபத்திற்குள்ளானதற்கான காரணத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.

south korean plane crash new report
தென் கொரியா விமானம்எக்ஸ் தளம்

இந்த நிலையில், விமான விபத்துக்கு, என்ஜினில் பறவைகள் காரணமாக இருக்கலாம் எனவும் அதன் கழிவுகள் இருந்ததாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், பறவைதான் காரணம் என்று உறுதிபடத் தெரிவிக்கப்படவில்லை. விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டு என்ஜின்களிலும், பறவையின் சிறகுகள், ரத்தக் கறைகள் இருந்ததாகவும், அது எந்தவிதமான பறவை என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டிருப்பதாகவும், வெளிநாட்டிலிருந்து வரும் வாத்து போன்ற ஒரு பறவை என்றும் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

south korean plane crash new report
தென்கொரியா | விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி மூலம் தெரியவந்த அதிர்ச்சி தகவல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com