காருக்குள் இறந்த நிலையில் கிடந்த ஆஸ்கர் விருதுபெற்ற ‘பாரசைட்’ பட நடிகர்..அதிர்ச்சியில் திரையுலகினர்!

ஆஸ்கர் விருதுபெற்ற ‘பாரசைட்’ திரைப்படம் மூலம் பிரபலமான தென்கொரிய நடிகர் லீ சுன் கியுன் இறந்தநிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
Lee Sun Kyun
Lee Sun Kyuntwitter

தென்கொரிய இயக்குநர் பாங் ஜூன் ஹோ இயக்கத்தில், கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான படம், ‘பாரசைட்’. இந்தப் படம் ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றிருந்தது. இந்த படத்தில் தென்கொரிய நடிகர் லீ சுன் க்யூன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன்மூலம் பிரபலமானார். இவர், திரைப்படங்கள் தவிர தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்த நிலையில், 48 வயதான லீ, இன்று (டிச.27) சியோல் நகரில் உள்ள ஒரு பார்க்கில் தனது காரின் உள்ளே இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

அவரது மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். லீ சுன் கியுன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக, இவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டதன்மூலம் என்மீது நம்பிக்கைவைத்த மக்களையும், என் குடும்பத்தையும் ஏமாற்றியதற்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் அவர் காருக்குள் சடலமாக கிடந்ததால், தற்கொலை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

இதையும் படிக்க: இன்ஃபினிக்ஸ்: இந்தியாவில் லேப்டாப் தயாரிக்கும் சீன நிறுவனம்.. 75,000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com