மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு| ஸ்லோவாக்கியா பிரதமர் டிஸ்சார்ஜ்.. மருத்துவர்கள் கண்காணிப்பு!

உடல்நலம் தேறியதை அடுத்து மருத்துவமனையில் இருந்து ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஃபிகோ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ராபர்ட் ஃபிகோ
ராபர்ட் ஃபிகோஎக்ஸ்

கிழக்கு ஐரோப்பியாவில் உள்ள சிறிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவாக்கியாவின் பிரதமரும், இடதுசாரி ஸ்மெர் கட்சி தலைவருமான ராபர்ட் ஃபிகோ, கடந்த மே 15ஆம் தேதி, தலைநகர் பிரட்டிஸ்லாவா அருகே நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், ராபர்ட் ஃபிகோ படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

உடலில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகளை அகற்ற அவருக்கு அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது. எனினும், தொடர் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததுடன், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலும் இருந்தார். இதனால், பிரதமரின் உடல் நலம் முன்னேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

இதையும் படிக்க: ’என் காதலிய அழைச்சிட்டு வரலாமா?’ - சுனில் நரைன் உடனான முதல் சந்திப்பு.. காம்பீர் சொன்ன சுவாரஸ்யம்!

ராபர்ட் ஃபிகோ
மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஸ்லோவாக்கியா பிரதமர் படுகாயம்.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

இந்த நிலையில், உடல்நலம் தேறியதை அடுத்து மருத்துவமனையில் இருந்து பிரதமர் ராபர்ட் ஃபிகோ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கும் அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார்.

பிரதமர் ராபர்ட் ஃபிகோவைச் சுட்ட மர்ம நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:India Head Coach | தகுதிகள் என்னென்ன? தோனிக்கு ஏன் வாய்ப்பில்லை? கம்பீருக்கு இதனால்தான் வாய்ப்பு!

ராபர்ட் ஃபிகோ
தாய்லாந்தை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவம்.. 22 குழந்தைகள் உட்பட 34 பேர் சுட்டுக்கொலை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com