கால்பந்து ஸ்கை ஸ்டேடியம்
கால்பந்து ஸ்கை ஸ்டேடியம்web

’1,150 அடி உயரத்தில்..’ உலகின் முதல் 'Sky Stadium'.. எந்த நாட்டில் தெரியுமா..?

சவுதி அரேபியாவின் பாலைவனத்தில் 1,150 அடி உயரத்தில் 'ஸ்கை ஸ்டேடியம்' (வான மைதானம்) அமையவுள்ளது.. இது குறித்து விரிவாக பார்க்கலாம்..
Published on
Summary

நியோம் நகரில் உருவாகும் 'ஸ்கை ஸ்டேடியம்', 2034 பிஃபா உலகக் கோப்பைக்கு தயாராகிறது. 350 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மைதானம், 46,000 பார்வையாளர்களை அமர வைக்கும் திறனுடன், சூரிய மற்றும் காற்றாலின் ஆற்றல் மூலம் இயங்கும். 2027-ல் கட்டுமானம் தொடங்கி 2032-ல் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுதி அரேபியாவின் லட்சிய திட்டமான நியோம்-இல் அமையவுள்ளது கால்பந்து மைதானமான 'நியோம் ஸ்டேடியம்'. இது பாலைவனத்தின் தரையில் இருந்து சுமார் 350 மீட்டர் உயரத்தில் அமையவிருக்கிறது.. இது உலகின் முதல் "ஸ்கை ஸ்டேடியம்" ஆக இருக்கும் என கட்டுமானத் துறை ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கை ஸ்டேடியம்
ஸ்கை ஸ்டேடியம்

இந்த மைதானம் 46,000 பார்வையாளர்கள் அமரும் வசதியுடன் கட்டப்படும். இது சூரிய மற்றும் காற்றாலின் ஆற்றல் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. 2034-ம் ஆண்டு பிஃபா (FIFA) உலகக் கோப்பை போட்டிகளை நடத்த இந்த மைதானம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. மேலும் இதன் கட்டுமானப் பணிகள் 2027-ல் தொடங்கி 2032-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கால்பந்து ஸ்கை ஸ்டேடியம்
NO.1 vs NO.2 அணிகள் T20 மோதல்| பும்ரா, டிம் டேவிட் IN.. 2 அணிகளின் பலம்? பலவீனம்? அலசல்!

இந்த மைதானம், நியோம் நகருக்குள் அமையவுள்ள நேரியல் ஸ்மார்ட் சிட்டியான 'தி லைன்' உடன் ஒருங்கிணைக்கப்பட்டு, எதிர்கால கட்டிடக்கலை மற்றும் நிலைத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட உள்ளது. இந்த மைதானத்தின் உயரம் மற்றும் இடம் காரணமாக பாதுகாப்பு மற்றும் அணுகல் தன்மைக்கு புதுமையான தீர்வுகளைக் கோரும் பொறியியல் சவால்களை இந்த திட்டம் எதிர்கொள்கிறது.

ஸ்கை ஸ்டேடியம்
ஸ்கை ஸ்டேடியம்

ஆயினும், சவுதி அரேபியாவின் 'விஷன் 2030' திட்டத்தின் ஒரு பகுதியாக, சுற்றுலா மற்றும் முதலீட்டை அதிகரிக்கும் ஒரு அடையாளமாக இந்த மைதானம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கால்பந்து ஸ்கை ஸ்டேடியம்
NO.1.. NO.2.. NO.3.. பேட்டர், பவுலர், ஆல்ரவுண்டர்! ஆண், பெண் கிரிக்கெட்டில் யாரும் படைக்காத சாதனை!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com