வரலாற்றில் முதன்முறையாக.. சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றிவாகை சூடிய தமிழர்!

சிங்கப்பூர் தேர்தலில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மனுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் நடந்து முடிந்த தேர்தலில் அவரே வெற்றி பெற்று 9வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
TharmanShanmugaratnam
TharmanShanmugaratnampt web

இந்திய அரசியலமைப்பு நடைமுறைப்படியே சிங்கப்பூர் அரசியலமைப்பும் நடைமுறையில் இருக்கிறது. சிங்கப்பூரில் அதிபர் முறை இருந்தாலும் அதிகாரங்களைப் பொறுத்தவரை பிரதமருக்கே அதிகமாக இருக்கும். செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறைகள் தொடங்கின.

Singapore
TharmanShanmugaratnam
Singapore TharmanShanmugaratnam

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் உட்பட மூன்று பேர் இத்தேர்தலில் போட்டியிட்டனர். 1988 ஆம் ஆண்டு சிங்கப்பூர் வர்த்தக தொழில்துறை அமைச்சகத்தின் மூத்த பொருளாதார நிபுநரான நியமனம் செய்யப்பட்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் எம்.பியாக கடந்த 2001 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். கல்வி, நிதி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில் இன்று நடந்த தேர்தலில் சிங்கப்பூரின் 9 ஆவது அதிபராக தர்மன் சண்முகரத்தினம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தமாக 70.4% வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்தினம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அந்நாட்டு தேர்தல் துறை அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com