\
significant change in the price of gold over the next six months
change in the price of gold Reuters

தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? அமெரிக்கா எடுத்த முக்கிய முடிவு: விலையில் வரப்போகும் மாபெரும் மாற்றம்!

அடுத்த 6 மாதங்களில் தங்கத்தின் விலையில் பெரும் மாற்றம் ஏற்படும் என முன்னணி ஆய்வு இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
Published on: 

கடந்த 100 ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை அதிகரித்து வந்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களில் தங்கத்தின் விலை வரலாற்றில் இல்லாத அளவு பல மடங்கு அதிகரித்தது. இது, சர்வதேச அரங்கில் பெரும் அசாதாரண நிகழ்வாகப் பார்க்கப்பட்டது. தங்கம் விலை இந்த அளவு அதிகரித்ததற்கு ரஷ்யா-உக்ரைன் போர், ஈரான் - அமெரிக்கா போர் மற்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் கணிக்க முடியாத செயல்பாடு ஆகியவையே முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்டது.

இதன் காரணமாக, சீனா உள்ளிட்ட நாடுகள் டாலரின் மேல் இருந்த நம்பிக்கையை இழந்து, தங்களிடமிருந்த அமெரிக்க பத்திரங்களை முன்னெப்போதும் இல்லாத அளவு விற்பனை செய்து அதற்குப் பதில் தங்கத்தை வாங்கிக் குவித்தன. இந்தியாவும் கடந்த 2024-ஆம் ஆண்டு மட்டும் 77 டன் தங்கத்தை வாங்கிக் குவித்தது. சர்வதேச அரங்கில் தங்கத்தின் விலை உச்சத்தை அடைய இந்த நிகழ்வே முக்கியக் காரணமாகப் பார்க்கப்பட்டது.

 Gold
GoldReuters

இந்த நிலையில், தற்போது ஈரான் - அமெரிக்கா போர் ஒரு முடிவை நோக்கி சென்றுவருவதாகவே பார்க்கப்படுகிறது. 6 மாதங்கள் தொடர் போர் காரணமாக அமெரிக்கா, இரான் ஆகிய இரு நாடுகளும் சோர்ந்துள்ளன. இதனால் இரு தரப்பும் போரை முடிவுக்கு கொண்டுவர தீவிர பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளன. இதனால் இந்த போர் விரைவில் முடிவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Gold
GoldReuters

அப்படி போர் முடிவடைந்தால் தங்கத்தின் விலை சில நாட்களிலேயே 5% முதல் 15% வரை சரிய வாய்ப்புள்ளதாக இந்தியாவின் முன்னணி நிதி ஆய்வு இதழான Moneycontrol கூறியுள்ளது. போர் முடிவுக்கு வந்தால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் செய்துள்ள முதலீட்டை திரும்பப்பெற்று அதிக லாபம் தரும் பங்குசந்தையில் முதலீடு செய்வதால் இந்த சரிவு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே நேரம் இந்த சரிவு தற்காலிகமானதாக மட்டுமே இருக்கும் என்றும், உலகம் முழுவதும் உள்ள மத்திய வங்கிகள் அதிகளவில் தங்கத்தைச் சேமித்து வருவதால், தங்கத்தின் விலை பெரிய அளவில் சரிவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் அந்த இதழ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

significant change in the price of gold over the next six months
ஒரே நேரத்தில் 5 புயல்கள், 7 புயல் சின்னங்கள்.. அதில் 3 அதிதீவிர புயல்கள்: கோரத்தாண்டவமாடும் இயற்கை!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com