\
Five storms have formed in the Pacific Ocean
stormsWindy.com

ஒரே நேரத்தில் 5 புயல்கள், 7 புயல் சின்னங்கள்.. அதில் 3 அதிதீவிர புயல்கள்: கோரத்தாண்டவமாடும் இயற்கை!

பசிபிக் கடலில் மட்டும் ஒரே நேரத்தில் 5 புயல்கள் உருவாகியுள்ளது ஆயிரக்கணக்கான உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 

இயற்கையின் மிகப்பெரும் அழிவு சக்திகளில் ஒன்றாக புயல்கள் இருந்து வருகின்றன. ராட்சச அலைகளை உருவாக்கி, மழை, பெருவெள்ளம், அதி தீவிர காற்று என இந்த புயல்கள் ஆயிரக்கணக்கான உயிர்களை பழிவாங்கி வருகிறது. அதிலும் கடற்கரையோர பகுதிகள் புயல்களால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இப்படி கடலில் உருவாகும் ஒரு புயலே பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது உலகில் 5 புயல்கள் ஒரே நேரத்தில் உருவாகியுள்ளது அரிதான மற்றும் ஆபத்தான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. அதாவது பசிபிக் கடலில் மட்டும் போலோ (Polo), சுரிகே (Surigae) நோலோ (Nolo), ஓடாலிஸ் (Odalys) மற்றும் ரேச்சல் (Rachel) ஆகிய 5 புயல்கள் உருவாகியுள்ளது.

storms
stormsnews on air

இதில் போலோ (Polo) , சுரிகே (Surigae) மற்றும் நோலோ (Nolo) ஆகிய 3 புயல்கள் அதிதீவிர புயல்களாக உருவாகியுள்ளது. மேலும் ஓடாலிஸ் (Odalys) மற்றும் ரேச்சல் (Rachel) ஆகியவை நடுத்தரப் புயல்களாக பதிவாகியுள்ளது. இது தவிர மூன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலங்களும் பசிபிக் மற்றும் அட்லாண்டிக் கடலில் உருவாகியுள்ளது.

இதில் போலோ (Polo) புயல் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் மெக்சிகோ கடற்கரையை ஒட்டி உருவாகி, மிகக் குறுகிய காலத்தில் அதிதீவிர புயலாக உருவெடுத்துள்ளது. நோலோ (Nolo) புயல் பசிபிக் பெருங்கடலின் மத்தியப் பகுதியில் பலமடைந்து ஹவாய் (Hawaii) தீவுகளை நோக்கி நகர்ந்து வருகிறது. சுரிகே (Surigae) புயல் மேற்கு பசிபிக் பகுதியில் உருவான அதிதீவிர புயலாக மாறி தைவானை நோக்கி நகர்ந்து வருகிறது.

Windy.com

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் பல புயல்கள் உருவாவது இயல்பு என்றாலும், ஒரே நேரத்தில் 3 புயல்கள் தீவிர நிலையை எட்டுவது அரிதான நிகழ்வாகும். இதற்கு முன்னர் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஒரே நேரத்தில் 3 அதிதீவிர புயல்கள் உருவானது.

இது குறித்து ஆய்வாளர்கள் கூறும்போது, பொதுவாக கடல்களின் நீர் வெப்பநிலை 26.5 டிகிரி செல்ஸியஸ்க்கும் அதிகமாக உயரும் போது, புயல்கள் உருவாகத் தேவையான நீராவி ஆற்றல் உருவாகிறது. தற்போது எல் நினோ (El Niño) மற்றும் உலக வெப்பமயமாதல் காரணமாகக் கடல் நீரின் வெப்பநிலை வழக்கத்தை விட அதிகமாக உயர்ந்துள்ளதால் ஒரே நேரத்தில் பல தீவிர புயல்கள் உருவாகத் தேவையான ஆற்றல் கடலுக்குக் கிடைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும், சமீபத்திய ஆண்டுகளில் புகடல் நீர் அதிக வெப்பமடைவதால், சாதாரண தாழ்வு மண்டலங்கள் கூட மிகக் குறுகிய காலத்தில் அதிதீவிரப் புயல்களாக உருமாறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Five storms have formed in the Pacific Ocean
100 கோடி மக்களின் உயிருக்கு ஆபத்து.. பில் கேட்ஸ் விடுத்த எச்சரிக்கை.. நடக்கப்போவது என்ன?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com