shubhanshu shukla says on indias axiom 4 mission
சுபன்ஷு சுக்லாஎக்ஸ் தளம்

தண்ணீர் பாட்டிலே 20,000 ரூபாயா? வியக்க வைக்கும் விண்வெளி விவகாரம்.. அடுக்கும் விஞ்ஞானி!

தண்ணீர் பாட்டிலே 20,000 ரூபாயா? வியக்க வைக்கும் விண்வெளி விவகாரம் அடுக்கும் விஞ்ஞானி
Published on

14 நாட்களுக்கு விண்வெளி நிலையத்தில் தங்கி, பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் அடங்கிய குழு பயணம் மேற்கொண்டுள்ளது. இஸ்ரோ, நாசா மற்றும் ஆக்‌ஷியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் கூட்டு முயற்சியாக உருவாகியுள்ள ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தின் கீழ், நேற்றைய தினம் புறப்பட்டவர்கள் நேற்று மாலை விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். பத்திரமாக சென்று சேர்ந்தவர்கள் அடுத்தடுத்த நாட்களில் சுமார் 60 விதமான ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த திட்டத்திற்காக மொத்தமாக சுமார் 548 கோடி ரூபாயை இஸ்ரோ செலவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் செல்லும் இந்திய வீரர்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் செல்லும் இந்திய வீரர்

இந்த நிலையில்தான், விண்வெளி திட்டங்கள் மற்றும் அங்கு கொண்டு செல்லப்படும் பொருட்களுக்கான செலவு குறித்து செய்தி தொலைக்காட்சியில் பேசியிருக்கிறார் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி இளங்கோ. விண்வெளி நிலையத்திற்கு ஒரு கிலோ எடையுள்ள பொருளை எடுத்துச் செல்ல மட்டும் சுமார் 85 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றும், இங்கு 20 ரூபாய்க்கு இருக்கும் தண்ணீர் பாட்டில் விண்வெளி நிலையத்திற்கு கொண்டு செல்ல 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும் என்றும் கூறியிருக்கிறார் இளங்கோ.

புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக பயணிப்பதால், எரிபொருள் செலவு உள்ளிட்டவைகளால் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு கிராம் எடையும் முக்கியமானது. அதற்கான செலவு கூடும் என்று தெரிவித்துள்ளார். அதோடு ஒரு நொடிக்கு 7.5 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தால்தான் விண்வெளியில் பூமியைச் சுற்ற முடியும் என்றவர், இது குறைந்த பட்சமாக 250 கிலோமீட்டர் உயரத்திற்கு பொருந்தும் என்றும் கூறியுள்ளார்.

இஸ்ரோ
இஸ்ரோ

முன்னதாக இஸ்ரோவின் ககன்யான் திட்டத்திற்கு சுமார் 9 ஆயிரம் கோடி செலவான நிலையில், ஆக்ஸியம் 4 திட்டத்திற்கு 548 கோடியை செலவிட்டிருக்கிறது இஸ்ரோ. இது குறித்து பேசும் விஞ்ஞானிகள் 548 கோடி செலவு என்பது குறைவுதான் என்றும் தெரிவிக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com