\
russia ukraine war
russia ukraine war reuters

ரஷ்யா-உக்ரைன் போரில் பேரிழப்பு.. 7.2 லட்சம் வீரர்கள் மரணித்ததாக அதிர்ச்சி தகவல்!

ரஷ்யா - உக்ரைன் போரில் இதுவரை 7 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
Published on: 
Summary

ரஷ்யா-உக்ரைன் போரில் 7.2 லட்சம் வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் சுயாதீன ஊடகங்கள் மற்றும் பிபிசி ஆய்வுகள் மூலம் இந்த விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. பெரும்பாலான உயிரிழப்புகள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து ஏற்பட்டுள்ளன. போர்க்களத்தில் காயமடைந்தவர்களை மீட்பதில் தாமதம் பலி எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

ரஷ்யாவின் சுயாதீன ஊடகங்களான 'மெடுசா' (Meduza), 'மீடியாசோனா' (Mediazona) ஆகியவை நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்துள்ளன. 2022 செப்டம்பருக்குப் பிறகு, போர் உயிரிழப்புகள் குறித்த அதிகாரபூர்வத் தகவல்களை ரஷ்ய அரசு ரகசியமாக வைத்துள்ளது. இந்த நிலையில், ரஷ்ய புள்ளியியல் அமைப்பான 'ரோஸ்டாட்' (Rosstat) இன் கசிந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், சுமார் 4 லட்சத்து 90 ஆயிரம் ராணுவ மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், போர்க்களத்தில் மாயமானவர்களில் சுமார் 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கலாம் எனவும் புள்ளியியல் மாதிரிகள் கணிக்கின்றன. இதனுடன், பிபிசி, மீடியாசோனா அமைப்புகள் பொதுவெளித் தகவல்கள் மூலம், சுமார் 2 லட்சத்து 89 ஆயிரம் வீரர்களின் பெயர்களை உறுதிசெய்துள்ளன.

உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம்
உக்ரைன் ரஷ்யா போர் நிறுத்தம்file photo

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் மாஸ்கோ போன்ற பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல; மாறாக, பின்தங்கிய கிராமப்புறப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், உயிரிழந்த வீரர்களின் சராசரி வயதும் 34இல் இருந்து 40ஆக உயர்ந்துள்ளது. அதிக ஊதியம், போனஸ் தொகைக்காக ஒப்பந்த வீரர்களாக இணைந்தவர்கள், சிறைகளிலிருந்து ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்கள், வெளிநாட்டினரே இதில் அதிகம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

russia ukraine war
russia ukraine war reuters

ரஷ்ய ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் (Donetsk) போன்ற பகுதிகளில் நவீன ட்ரோன்கள், பீரங்கிகள், கண்ணி வெடிகள் போன்றவற்றால் நடத்தப்பட்ட தாக்குதல்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதேபோல், காயமடைந்த வீரர்களை போர்க்களத்திலிருந்து மீட்பதில் ஏற்படும் தாமதமும் பலி எண்ணிக்கையை உயர்த்தியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

russia ukraine war
இஸ்ரேல் ராணுவத்தில் அதிகரிக்கும் தற்கொ*.. வெளியான அதிர்ச்சித் தகவல்!!