இஸ்ரேல் ராணுவத்தில் அதிகரிக்கும் தற்கொ*.. வெளியான அதிர்ச்சித் தகவல்!!
இஸ்ரேல் ராணுவத்தில் தற்கொலை செய்துகொள்ளும் வீரர்களின் எண்ணிக்கை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலிய நாளிதழான ஹாரெட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ம் ஆண்டின் தொடக்கம் முதல் இதுவரை பணியில் இருந்த 23 ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மேலும், காசா போரில் வழக்கமான மற்றும் ரிசர்வ் படைகளில் பணியாற்றிய 17 முன்னாள் வீரர்களும் பணியிலிருந்து வெளியேறிய பிறகு இந்த ஆண்டில் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இதுதவிர, 5 காவல்துறை அதிகாரிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா போர் தொடங்குவதற்கு முந்தைய பத்து ஆண்டுகளில், இஸ்ரேல் ராணுவத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 தற்கொலை மரணங்கள் பதிவாகியுள்ளன. ஆனால், 2024-ல் 21 ஆகவும், 2025-ல் 22 ஆகவும் இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்தாண்டு, நவம்பர் மாதம் வரை 23 தற்கொலைகளாக அதிகரித்திருக்கிறது.

