\
Sheikh Hasina Passport Denied, Death Penalty Awaits on Return
ஷேக் ஹசீனாReuters

ம*ணத் தண்டனை அபாயம்.. வங்க தேசம் திரும்பும் ஷேக் ஹசீனா?

மரண தண்டனை அச்சத்திற்கு மத்தியில், அடுத்த மாதம் ஷேக் ஹசீனா வங்கதேசம் திரும்பவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
Published on: 

செய்தியாளர் - M.மீரா

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, இந்தியாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தஞ்சமடைந்துள்ள நிலையில், வரும் டிசம்பர் 16-ம் தேதி மீண்டும் வங்கதேசம் திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக கடந்த 2024-ஆம் ஆண்டு மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து அங்கு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, இடைக்கால அரசு அமைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில், பின்.என்.பி. கூட்டணி அமோக வெற்றிபெற்று அரியணையைப் பிடித்தது. அக்கட்சியின் தலைவர் தாரிக் ரஹ்மான் புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார்.

Tarique Rahman),
Tarique Rahman), Reuters

அதேநேரத்தில், வன்முறை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என தீர்ப்பளித்த சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம், அவருக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, அவரை நாடு கடத்துமாறு வங்கதேச அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் தஞ்சமடைந்த ஷேக் ஹசீனா 2 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆகஸ்ட் மாதம் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில், வங்கதேசம் நான் திரும்பினால் கொல்லப்படலாம். ஆனாலும், நான் டிசம்பரில் நாடு திரும்புவேன் எனத் தெரிவித்திருந்தார்.

இந்தச்சூழலில் மீண்டும் ஷேக் ஹசீனா வரும் டிசம்பர் 16-ம் தேதி மீண்டும் வங்கதேசம் திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார் என்று . ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. வங்கதேசத்தின் விடுதலைப் போரில் பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெற்றதைக் கொண்டாடும் டிசம்பர் 16-ம் தேதியை தனது தாயகம் திரும்புவதற்கான நாளாக ஹசீனா தேர்வு செய்துள்ளார். பல மாதங்களாகவே நாடு திரும்புவது குறித்து அவர் பேசி வந்தாலும், தற்போது முதல்முறையாக குறிப்பிட்ட தேதி தற்போது வெளியாகியிருக்கிறது.

Bangladesh Violence
Bangladesh Violencereuters

தற்போது தனது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை மீண்டும் வழங்க வேண்டும் என்றும், இந்தியாவின் டெல்லியில் இருந்து வங்கதேசத்தின் டாக்காவுக்கு பிமான் வங்கதேச விமானம் மூலம் தன்னை அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையே, ஹசீனா நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார் என வங்கதேச அரசு எச்சரித்துள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள அவர், நாட்டுக்குள் நுழைந்தவுடன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஷமா ஒபாயித் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா - வங்கதேசம் இடையிலான நாடு கடத்தல் ஒப்பந்தத்தின்படி, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள ஹசீனாவை இந்தியா ஒப்படைக்க வேண்டும் என்றும் வங்கதேசம் வலியுறுத்தியுள்ளது.

Sheikh Hasina Passport Denied, Death Penalty Awaits on Return
அமெரிக்காவை மிரளவிடும் ஏவுகணைப் படை.. ஈரானின் புதிய "Missile city".. அப்படி என்ன special?