பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் நிதி உதவி
பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் நிதி உதவிமுகநூல்

பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் நிதி உதவி - ரஷ்யாவின் புதிய அறிவிப்பு!

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இங்கு மக்கள்தொகை வெறும் எட்டாயிரமாக குறைந்துவிட்டதால் ஒர்யோல் பிராந்தியம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.
Published on

ஒருபக்கம் உக்ரைனுடனான போர்... இளைஞர்கள், பெரியவர்கள் என போர் முனையில் கொல்லப்பட்ட இரண்டரை லட்சம் ரஷ்ய வீரர்கள்.. அதிகரிக்கும் இறப்பு விகிதமும், வெகுவாக சரியும் பிறப்பு விகிதமும் ரஷ்யாவுக்கு இருமுனை நெருக்கடியாகி இருக்கிறது. இச்சூழலில்தான், இதுவரை இல்லாத ஒரு நடைமுறையை ரஷ்யா கையில் எடுத்துள்ளது.

பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றுக்கொள்வதற்காக ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிக தொகையை தரும் வகையில் ரஷ்ய அரசு திருத்தம் கொண்டுவந்துள்ளது. ORYOL தான், பள்ளிச்சிறுமிகள் குழந்தைப் பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்க உதவித்தொகை அறிவித்த முதல் ரஷ்ய பிராந்தியம். கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இங்கு மக்கள்தொகை வெறும் எட்டாயிரமாக குறைந்துவிட்டதால் ஒர்யோல் பிராந்தியம் இந்த அறிவிப்பை வெளியிட்டது.

இதன் தொடர்ச்சியாக தற்போது 40க்கும் அதிக பிராந்தியங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. இதுவரை இளம்பெண்கள் கருத்தரிக்க, இந்திய ரூபாய் மதிப்பில் ஒரேதவணையில் ஒருலட்சத்து 8 ஆயிரத்து 567 ரூபாய் அளிக்கப்பட்டது. தற்போது, இது பள்ளிச்சிறுமிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கருக்கலைப்பை தடை செய்தும், குழந்தைகள் இல்லாத வாழ்க்கை வாழவும் தடை விதித்தும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் பிறப்பு விகிதம் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. இறப்பு விகிதமோ கணிசமாக அதிகரித்து வருகிறது. உக்ரைன் உடனான போரில் இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிக ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இன்னும் போர் முடியவில்லை. இதே நிலை நீடித்தால் தற்போதுள்ள 14 கோடி )) மக்கள் தொகை, 2050இல் 13 கோடியாக சரிந்துவிடும் என்று ரஷ்ய அரசு கருதுகிறது.

பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம் நிதி உதவி
உக்ரைனுடன் போர் |"புடினின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை" - ட்ரம்ப் குற்றச்சாட்டு!

இதனால் பள்ளிச்சிறுமிகளும் கருத்தரிப்பதை ஊக்குவிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும், 43 % ரஷ்யர்கள், இக்கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஒருவர் மூன்றுக்கும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது ரஷ்யாவின் புதிய விதியாகவே மாற்றப்படுவதாக அந்நாட்டு அதிபர் புதின் கூறியுள்ளார்.

ரஷ்ய அதிபர் புதின் மட்டும் அல்ல, ஹங்கேரி அரசும், குழந்தை பிறப்பை ஊக்குவிக்க வரிச்சலுகைகள், மானியங்கள் அறிவித்துள்ளது. 3 குழந்தைகளோ அதற்கு மேல் பெற்றுக்கொண்டாலோ வரித்தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

போலந்து நாட்டில், 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால் அந்த குடும்பத்துக்கு மாதந்தோறும் சுமார் 12 ஆயிரம் உதவித்தொகையை அந்நாட்டு அரசு அளித்துவருகிறது.

அமெரிக்காவும் இதற்கு விதிவிலக்கல்ல, குழந்தை பெற்றுக்கொள்ளும் பெண்ணுக்கு 5 ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 4 லட்சத்து 27 ஆயிரத்து 500க்கும் அதிக ரூபாய் வழங்கப்படும் என்று ட்ரம்ப் அறிவித்துள்ளார். பெண்கள் தங்கள் குடும்பத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் வேறுவிதமான நெருக்கடி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. தற்போது இந்தியாவின் பலம் மனிதவளம். குன்றா இந்த மனித வளம், இன்னும் ஒரு சில பத்தாண்டுகளில் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள, அதாவது ’வொர்க்கிங் பாப்புலேஷன்’ எனப்படும் வேலைத்திறன் மிக்க இளைஞர் படை, மூத்த குடிமக்களாக மாறிவிட்டால், ஜப்பானைப் போலவே மூத்த குடிமக்கள்அதிகம் உள்ள நாடாக இந்தியா மாறிவிடும். நாட்டின் உற்பத்தி, செயல்திறன், வேலைத்திறன்மிக்க துடிப்புள்ள இளைஞர் தொகையின் எண்ணிக்கை குறையும் நிலையும் ஏற்படக்கூடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com