donald trump losing patience with putin over ukraine
ட்ரம்ப், புதின்எக்ஸ் தளம்

உக்ரைனுடன் போர் |"புடினின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை" - ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ரஷ்ய அதிபர் புடினின் செயல்பாடுகள் அதிருப்தி தருவதாகவும் அந்நாடு மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Published on

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதில் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக, உக்ரைன் மீது போரை நிறுத்த புடினை ட்ரம்ப் பல முறை வலியுறுத்தி வருகிறார்.

donald trump losing patience with putin over ukraine
putin, trumpx page

ஆனாலும் புடின் தொடர்ந்து உக்ரைன் மீது போரிடுவது ட்ரம்ப்பிற்கு ஆத்திரமூட்டியுள்ளது. இதையடுத்து ரஷ்ய தாக்குதல்களை சமாளிக்க உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்களை அனுப்புவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதற்கிடையே உக்ரைன் மீது நேற்று இரவில் ஒரே நாளில் 728 ட்ரோன்களையும் 12 ஏவுகணைகளையும் வீசித் தாக்கியுள்ளது. இதில் 296 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இத்தாக்குதல்கள் உக்ரைனின் மேற்குப்பகுதியில் நடத்தப்பட்டது. 3 ஆண்டுகளாக நடத்தி வரும் போரில் உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதி நிலபரப்பை ரஷ்யா தன் வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

donald trump losing patience with putin over ukraine
”உக்ரைன் தாக்குதலுக்கு ரஷ்யா பதிலடி கொடுக்கும்” - அதிபர் ட்ரம்ப்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com