’என்னை கொன்று விடுவார்கள், தயவு செய்து காப்பாற்றுங்கள்’: தாய்லாந்தில் கதறிய சவுதி பெண்!

’என்னை கொன்று விடுவார்கள், தயவு செய்து காப்பாற்றுங்கள்’: தாய்லாந்தில் கதறிய சவுதி பெண்!

’என்னை கொன்று விடுவார்கள், தயவு செய்து காப்பாற்றுங்கள்’: தாய்லாந்தில் கதறிய சவுதி பெண்!
Published on

சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் ரஹஃப் முகமது அல்குனம் (Rahaf Mohammed al-Qunun). வயது 18. குடும்பத்தினர் இவருக்கு திருமண ஏற்பாடு செய்தார்களாம். மறுத்தார் ரஹஃப். இதையடுத்து அவரை அறைக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்தார்களாம். தலைமுடியை வெட்டி, அடித்து துன்புறுத்தியுள்ளனர். வீட்டில் இருந்து தப்பிக்க சரியான நேரம் பார்த்துக்கொண்டிருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு விமான டிக்கெட் எடுத்தார். அதாவது தாய்லாந்து சென்றுவிட்டு அங்கிருந்து ஆஸ்திரேலியா வுக்கு செல்ல திட்டமிட்டிருந் தார். பின்னர் சரியான நேரத்தில் வீட்டில் இருந்து தப்பிய ரஹஃப், சவுதி விமான நிலையம் வந்தார்.

சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியில் கொல்லப்பட்டதை அடுத்து சவுதி விமான நிலையத்தில் சோதனைகள் அதிகப்படுத்தப் பட்டி ருக்கிறது. அதன்படி ரஹஃபின் பாஸ்போர்ட்டை பரிசோதித்த குடியுரிமை அதிகாரிகள், அதை பறிமுதல் செய்தனர். அந்த நாட்டில் இளம் பெண் ஒருவர், உறவினரோ, கார்டியனோ இல்லாமல் செல்லக் கூடாது என்பதால் விசாரணை நடத்தினர். 

அப்போது, ரஹஃப்பின் கார்டியன் தனது அனுமதி இல்லாமல், வெளிநாடு செல்கிறார் என்று கூறினார். இதனால் அவரை வெளிநாடு அனுப்ப குடியுரிமை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தைச் சேர்ந்த சிலருக்கு ரஹஃப், ட்விட்டரில் தகவல் தெரிவித்தார். பின்னர் எப்படியோ சமாளித்து விமானத்துக்குள் ஏறிவிட்டார். அங்கிருந்து குவைத் வந்தார். அங்கும் குடியுரிமை அதிகாரிகள் அனுப்ப மறுத்தனர். பின்னர் அங்கும் சமாளித்து தாய்லாந்து விமானத்தைப் பிடித்தார்.

விமானம் தாய்லாந்து வந்தது. அவது பாஸ்போர்ட்டை சோதித்த அந்நாட்டின் குடியுரிமை அதிகாரிகள், ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கான ஆவணங்கள், பணம் உள்ளிட்ட ஏதும் இல்லாததை அடுத்து அவரை அனுப்ப மறுத்தனர். பின், விமான நிலைய ஓட்டலில் தங்க வைத்தனர். 

சவுதி தூதரகத்திடம் இதுபற்றி கூறினர். ரஹஃப் வீட்டில் இருந்து தப்பி வந்ததும் ஆஸ்திரேலியாவில் அகதியாக தஞ்சம் கோர இருப்பதும் அப்போதுதான் அவர்களுக்குத் தெரியவந்தது. ஆனால், அவரை ஆஸ்திரேலியா அனுப்ப தாய்லாந்து இமிகிரேஷன் அதிகாரிகள் மறுத்து விட்டனர். சவுதிக்கு திரும்ப அனுப்பப்போகிறோம் என்றனர்.

இதை ஏற்க மறுத்த ரஹஃப், ’’சவுதி சென்றதும் என்னை சிறையில் அடைப்பார்கள். அங்கிருந்து வெளியே வந்ததும் என்னைக் கொன்று விடுவார் கள்’’ என்று கதறினார். ’’நூறு சதவிகிதம், என்னை அவர்கள் கொல்வது உறுதி, தயவு செய்து என்னை அங்கு அனுப்பாதீர்கள்’’ என்று கண்ணீர் விட்டார். இதுபற்றி மனித உரிமை கமிஷனுக்கும் அவர் ட்விட் செய்தார். அவர்களும் ரஹப்புக்கு ஆதரவாக பேசினார். ஆனாலும் அவரை அனுப்ப தாய்லாந்து அதிகார்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தாய்லாந்து விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com