russias shahed drones now reaches all of ukraine
Shahed dronesx page

உக்ரைன் போர்| ஆதிக்கம் செலுத்தும் ஈரானிய ட்ரோன்கள்!

உக்ரைன் மீதான தாக்குதல்களில், Shahed எனப்படும் 50 ஆயிரம் டாலர்கள் மதிப்பிலான ஈரான் நாட்டை சேர்ந்த ட்ரோனை ரஷ்யா பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
Published on

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல்களில், Shahed எனப்படும் 50 ஆயிரம் டாலர்கள் மதிப்பிலான ஈரான் நாட்டை சேர்ந்த ட்ரோனை ரஷ்யா பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

russias shahed drones now reaches all of ukraine
Shahed dronesx page

குறிப்பாக, இந்த வகை ட்ரோன்கள், இரவு நேரத்தில் நடத்தப்படும் தாக்குதலின்போது உபயோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தொடக்கத்தில் ஈரானிலிருந்து பெறப்பட்ட இந்த ட்ரோன்கள், தற்போது ரஷ்யாவிலேயே பெருமளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ட்ரோன்கள் உக்ரைனின் முக்கியமான உள்கட்டமைப்புகளை, குறிப்பாக மின் உற்பத்தி நிலையங்களை குறிவைத்துத் தாக்கப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வகை ட்ரோன்களின் பயன்பாடு நவீனப் போரின் தன்மையையே மாற்றியமைத்து வருவதாக வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ட்ரோன்களால், போரின்போது அதிக அழிவை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாகவும், இது எதிர்கால போர்களின் வடிவத்தை முற்றிலுமாக மாற்றும் என்றும் அவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

russias shahed drones now reaches all of ukraine
உக்ரைனுடன் போர் |"புடினின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை" - ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com