\
Russia Retaliates After Oil Facility Attacks, 12 Killed in Ukraine
ரஷ்யா, உக்ரைன்X

உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடி.. ரஷ்ய தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு.. ஜெலன்ஸ்கி கண்டனம்!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக நேற்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 40 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

2022-ஆம் ஆண்டு தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், தற்போது ஐந்தாவது ஆண்டை எட்டியுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இரு நாடுகளும் தொடர்ந்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களைப் பயன்படுத்தி பரஸ்பரம் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆரம்பத்தில் எல்லைப் பகுதிகள் மட்டுமே நடைபெற்ற தாக்குதல்கள், தற்போது புதிய கட்டத்தை எட்டியுள்ளன. ரஷ்யா உக்ரைனின் நகரங்கள், மின்நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், உக்ரைனும் நீண்ட தூரம் பயணிக்கும் ட்ரோன்கள் மூலம் ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், எரிபொருள் கிடங்குகள் மற்றும் ராணுவத் தளங்களை குறிவைத்து தாக்கி வருகிறது.

உக்ரைன் - ரஷ்யா போர்
உக்ரைன் - ரஷ்யா போர்FB

அந்தவகையில் தான், நேற்றைய முன்தினம் இரவு ரஷ்யாவின் கிராஸ்னோடார் மற்றும் யாரோஸ்லாவ்ல் பகுதிகளில் உள்ள இரண்டு முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, கிராஸ்னோடார் ஆலை ஆண்டுக்கு சுமார் 40 லட்சம் டன் கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் இந்த நிலையம், ரஷியாவின் கருங்கடல் துறைமுகங்கள் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருட்களின் முக்கிய மையமாகும். இந்த தாக்குதலையடுத்து முதன் முறையாக ரஷ்ய அதிபர் புதின், நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். அதேசமயம், ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்படாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்தசூழலில் தான், நேற்று உக்ரேனிய எரிபொருள் உட்கட்டமைப்புகளைக் குறித்து ரஷ்யா தாக்குதல் நடத்தியிருக்கிறது. எனினும், இந்த தாக்குதலில், 6 வெவ்வேறு பிரந்தியங்களில் இருந்து 12 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்தசம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷ்யாவின் தாக்குதலில் 12 கொல்லப்பட்டிருப்பதாகவும், 40 பேரி காயமடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலை பயங்கரமான தாக்குதல் எனவும் தெரிவித்திருக்கிறார்.

போர் தொடங்கிய 4 ஆண்டு காலக்கட்டத்தில், உக்ரைனில் இதுவரை 16,000 பொதுமக்கள் உயிரிழந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருபது குறிப்பிடத்தக்கது.

Russia Retaliates After Oil Facility Attacks, 12 Killed in Ukraine
ஈரான்| அலி காமேனி இறுதிச்சடங்கு.. வெளியில் வருவாரா மொஜ்தபா? குறிவைக்கும் US, இஸ்ரேல்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com