Russia reacts in Poland Jet Fuel issue
donald tusk, putinx page

”2 மாதங்களில் பிச்சை எடுப்பீங்க..” எச்சரிக்கை விடுத்த ரஷ்யா.. யாருக்கு, எதற்கு தெரியுமா?

எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் அது, ஐரோப்பாவின் விமானப் பயணங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Published on

ஜெட் எரிபொருள் விவகாரம் ஐரோப்பிய நாடுகளை உலுக்கியுள்ளது. ஜெட் எரிபொருள் மற்றும் எரிசக்தி விவகாரங்களில் ரஷ்யாவின் செயல்பாடுகள் குறித்து போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) கடுமையான எதிர்வினைகளை ஆற்றியுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ப் பதற்றம் காரணமாக, உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கு முக்கியக் காரணம், ஈரான் வசமுள்ள ஹார்முஸ் ஜலசந்தி பாதைதான். இந்த வழியாகத்தான் உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% போக்குவரத்து நடைபெறுகிறது. இதை, ஈரான் மூடிவைத்துள்ள நிலையில், அமெரிக்காவோ தனது கடற்படை மூலம் அதை முற்றுகையிட்டுள்ளது. இதனால், அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இதன் காரணமாக, கோடைக்காலங்களில் விமானங்களை இயக்குவதற்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறை ஐரோப்பாவில் விரைவில் ஏற்படக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில் அது, ஐரோப்பாவின் விமானப் பயணங்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நாடுகள் தங்களது சுத்திகரிப்பு ஆலைகளை முழுத் திறனில் இயங்கினாலும், உள்நாட்டு உற்பத்தி தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால், ஜூன் மாதத்திற்குள் ஐரோப்பா ஜெட் எரிபொருளுக்கு நேரடி பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி முகமை எச்சரித்துள்ளது. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, லுஃப்தான்சா நிறுவனம் கோடைக்காலத்தில் 20,000 ஐரோப்பிய குறுகிய தூர விமான சேவைகளைக் குறைப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, மற்ற நிறுவனங்களும் அதனைப் பின்பற்றுகின்றன.

Russia reacts in Poland Jet Fuel issue
எரிபொருள் பற்றாக்குறை | விமானங்களுக்குப் பாதிப்பு.. ஐரோப்பாவுக்கு பெரிய சிக்கல்!

இந்தச் சூழலில் ஜெட் எரிபொருள் விவகாரம் ஐரோப்பிய நாடுகளை உலுக்கியுள்ளது. ஜெட் எரிபொருள் மற்றும் எரிசக்தி விவகாரங்களில் ரஷ்யாவின் செயல்பாடுகள் குறித்து போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk) கடுமையான எதிர்வினைகளை ஆற்றியுள்ளார். ”ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே எரிபொருள் பற்றாக்குறையை உருவாக்கி, அதன்மூலம் ஒற்றுமையை உடைப்பதே புடினின் கனவுத் திட்டம். எரிபொருளை ரஷ்யா ஒரு போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை போலந்து ஒருபோதும் அனுமதிக்காது. ரஷ்யர்களின் இருப்பைச் சகித்துக்கொள்ள வேண்டியதில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரஷ்யாவும் கடுமையான பதிலடியைத் தந்துள்ளது. இதுகுறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் சிறப்புத் தூதரான கிரில் டிமிட்ரியேவ், "இரண்டு மாதங்களில் எரிசக்திக்காகக் கெஞ்ச நீங்கள் ரஷ்யாவுக்கு வரும்போது சந்திப்போம். தயவுசெய்து விமானப் பயணத்திற்குத் தேவையான ஜெட் எரிபொருளைச் சேமித்து வையுங்கள்" எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

donad tusk
donad tuskx page

ஜெட் எரிபொருளை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கணிசமான சுத்திகரிப்பு ஆலையை ரஷ்யா கொண்டுள்ளது. எனினும், உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்புக்குப் பிறகு, ஐரோப்பிய நாடுகளின் தடைகள், அந்நாட்டை அழுத்தத்திற்கு ஆளாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com