போரால் பாதிக்கப்பட்ட வீடுகள்
போரால் பாதிக்கப்பட்ட வீடுகள்pt web

உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்.. போர் முடிவுக்கு வருவது எப்போது?

பேச்சுவார்த்தைகளில் சிக்கல், இரு பக்கமும் தொடரும் தாக்குதல் என ரஷ்யா - உக்ரைன் போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது.
Published on

பேச்சுவார்த்தைகளில் சிக்கல், இரு பக்கமும் தொடரும் தாக்குதல் என ரஷ்யா - உக்ரைன் போர் 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்கிறது. அமைதியை கொண்டு வர சர்வதேச நாடுகள் முயன்று வரும் நிலையில், ஒரே இரவில் நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் உக்ரைனின் பல பகுதிகளை மீண்டும் ரஷ்யா தாக்கியுள்ளது.

30க்கும் அதிகமான ஏவுகணைகள்... 300க்கும் அதிகமான ட்ரோன்கள்... என உக்ரைன் மீது தனது அதிரடியை தொடர்கிறது ரஷ்யா. கருங்கடல் துறைமுக நகரான ஒடேசாவை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் அடுக்குமாடி கட்டடங்கள் பற்றி எரிந்தன. அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்த நகர மேயர் ஜென்னாடி ட்ருக்கானோவ் தெரிவித்துள்ளார். ஒரு குழந்தை உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.

ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதல் ஒடேசாவுடன் நிற்கவில்லை. வடகிழக்கு பகுதியான சுமி வரை நீண்டது. அதில், முக்கிய உட்கட்டமைப்புகள் சேதமடைந்து விட்டது என்கிறார் அதிபர் ஜெலென்ஸ்கி.

போரால் பாதிக்கப்பட்ட வீடுகள்
GEN Z தலைமுறையினரின் அடையாளம் எமோஜிக்கள்.. ஆய்வில் வெளிவந்த புதிய தரவுகள்!

போரின் தொடக்க காலங்களில் பயன்படுத்தியதை விட நவீனமான ட்ரோன்களை ரஷ்யா தற்போது பயன்படுத்துவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டுகிறது. ஜூலை 8ஆம் தேதி இரவு ஒரே நேரத்தில் 700க்கும் அதிகமான ட்ரோன்களை ரஷ்யா ஏவியதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. அதன் பின் தாக்குதலின் வீரியம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.

இருதரப்புக்கும் இடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் இல்லாத நிலையில், இத்தகைய தாக்குதல்கள் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. க்ரூஸ் ஏவுகணைகள் உக்ரைன் வான்வெளி பாதுகாப்பிற்கு சவாலாக மாறி வருகின்றன. ரஷ்யாவின் 71 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாகவும் உக்ரைனும், மாஸ்கோ நோக்கி வந்த உக்ரைனின் 13 ட்ரோன்களை தாக்கி அழித்ததாக ரஷ்யாவும் கூறுகிறது. ஆனால், போர் எப்போது முடிவுக்கு வரும் என மக்கள் எழுப்பும் கேள்விக்கு மட்டும் இன்னும் யாரும் விடை கூறவில்லை...

போரால் பாதிக்கப்பட்ட வீடுகள்
அமெரிக்காவில் எம்ஆர்ஐ கருவிக்குள் இழுக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு..!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com