எம்ஆர்ஐ கருவி
எம்ஆர்ஐ கருவிமுகநூல்

அமெரிக்காவில் எம்ஆர்ஐ கருவிக்குள் இழுக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு..!

உலோகச் சங்கிலி நெக்லஸால் எம்ஆர்ஐ இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்ட நபர் உயிரிழந்தார்..
Published on

அமெரிக்காவின் நியூயார்க்கில், 61 வயது மதிக்கத்தக்க ஒருவர் எம்.ஆர்.ஐ கருவிக்குள் இழுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கழுத்தில் கனமான உலோகச் சங்கிலி அணிந்திருந்த அவர், நோயாளிக்கு MRI ஸ்கேன் நடந்துகொண்டிருந்த அறைக்குள் அனுமதி இல்லாமல் நுழைந்துள்ளார். அப்போது எம்.ஆர்.ஐ கருவியின் சக்திவாய்ந்த காந்தப்புலம், அந்த உலோகச் சங்கிலியை ஈர்த்ததால், அவர் கருவிக்குள் வேகமாக இழுக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயரச் சம்பவம், எம்.ஆர்.ஐ மையங்களில் பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

எம்ஆர்ஐ கருவி
மின்னாற்றலை செலுத்தினால் கணித திறன் அதிகரிக்குமா?

எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் உடலின் உட்புறத்தின் விரிவான படங்களை எடுத்துக் கொடுக்கும் ஒரு வலுவான காந்தப்புலங்கள் மற்றும் ரேடியோ அலைகள் நிறைந்த கருவியாகும்.. இந்த கருவியை அனைத்து மருத்துவமனைகளிலும் பயன்படுத்துகின்றன. இந்நிலையில் இந்த எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யும் பகுதியில் எச்சரிகையுடன் தான் மருத்துவர்களும் தொழில்நுட்ப வேலலையாட்களும் பணிபுரிவது வழக்கம்.. காரணம் அந்த இடத்தில் ஏதேனும் உலோகப் பொருட்கள் இருந்தால் அவை கடுமையான பாதுகாப்பு அபாயங்களை ஏற்படுத்துகின்றன.

எம்ஆர்ஐ கருவி
எம்ஆர்ஐ கருவி

இது குறித்து நேற்று நாசாவ் ஓபன் எம்ஆர்ஐ-யின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், எம்ஆர்ஐ ஸ்கேன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அறைகளில் உலோகப் பொருள் இருக்கக்கூடாது என்பது கடுமையாக நாங்கள் கடைப்பிடிக்கிறோம். ஆனால் அவரது உடையில் ஒரு உலோகப் பொருள் இருந்ததால் இப்படி சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றும் , அந்த நபர் எம்ஆர்ஐ அறைக்குள் எப்படி நுழைந்தார் என்பதும் தெரியவில்லை என்றார்.

எம்ஆர்ஐ கருவி
புறாக்களின் தொற்றால் மனிதர்களின் உயிருக்கே ஆபத்தா? விளக்குகிறார் மருத்துவர் ஐஸ்வர்யா!

இது குறித்து, தேசிய உயிரி மருத்துவ இமேஜிங் மற்றும் உயிரி பொறியியல் நிறுவனம், MRI இயந்திரங்கள் கனமான பொருட்களைத் தள்ளும் அளவுக்கு சக்திவாய்ந்த காந்த சக்திகளை உருவாக்குகின்றன என்று எச்சரிக்கிறது. "காந்தப்புலம் இரும்புப் பொருட்கள், சில வகையான எஃகு மற்றும் அறை முழுவதும் ஒரு சக்கர நாற்காலியைத் தூக்கி எறியும் அளவுக்கு வலிமையான பிற காந்தப் பொருட்கள் மீது மிகவும் வலுவான சக்திகளை உருவாக்க முடியும்" என்று நிறுவனம் கூறுகிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com