2 நிமிஷம்தான்.. 20 முறை பண்ணினா போதும்.. பஸ் டிக்கெட் இலவசமா கொடுப்பாங்கலாம்.. எங்கே?

2 நிமிஷம்தான்.. 20 முறை பண்ணினா போதும்.. பஸ் டிக்கெட் இலவசமா கொடுப்பாங்கலாம்.. எங்கே?
2 நிமிஷம்தான்.. 20 முறை பண்ணினா போதும்.. பஸ் டிக்கெட் இலவசமா கொடுப்பாங்கலாம்.. எங்கே?

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால் மட்டும் போதாது, உடற்பயிற்சியும் செய்வது மிக முக்கியமான ஒன்று என மருத்துவர்கள் எப்போதும் அறிவுறுத்துவது வழக்கம். ஆனால் அதனை அனைவரும் பின்பற்றுகிறார்களா என்பதே கேள்விக்குறி.

இப்படி இருக்கையில், ஐரோப்பாவின் ரோமானியா நாட்டில் மக்களின் உடல் ஆரோக்கியத்தை பேணி காக்கும் வகையில் புதுமையான நடைமுறையை செயல்படுத்தி வருகிறது.

அது என்னவெனில், பேருந்துகளில் செல்ல இலவச டிக்கெட் வேண்டுமென்றால் டிக்கெட் மிஷின் முன்பு கட்டாயம் 20 முறை தோப்புக்கரணம் போட வேண்டுமாம். அப்படி 20 முறை Squats செய்தால் மட்டுமே இலவச டிக்கெட்டை பெற முடியும். இதில் எதாவது ஜிம்மிக்ஸ் செய்தால் டிக்கெட் பெற முடியாது.

ஏனெனில் அந்த மிஷினில் கேமிரா பொறுத்தப்பட்டிருக்கிறதாம். அதன் வழியாக தோப்புக்கரணம் போடுவோரை கண்காணித்து சரியாக 20வது முறை முடித்த பிறகு ஆட்டோமேட்டிக்காக பஸ் டிக்கெட்டை மிஷின் வழங்கிவிடும்.

இந்த நடைமுறை ரோமானியாவின் க்ளூஜ் நபோகா (Cluj-Napoca) என்ற பகுதியில் பயன்பாட்டில் உள்ளது. தோப்புக்கரணம் மட்டுமல்லாமல் இதே நகரத்தின் மற்ற பல இடங்களில் சைக்கிளிங் செய்வதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருக்கும் டிக்கெட் மிஷின் முன்பு இருக்கும் நிலையான சைக்கிளில் 400 மீட்டருக்கு சைக்கிளை மிதித்தால் போது இலவசமாக டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம்.

இதனை அலினாப் ஜோல்கினா (alina bzholkina) என்ற வீடியோ கிரியேட்டர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோக்கள் 20 லட்சத்துக்கும் மேலானோரை கவர்ந்திருக்கிறது.

அதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் “இது ஒரு நல்ல நடைமுறை” , “உலகின் மற்ற நாடுகளை விட ரோமானியா மட்டும் எப்படி இத்தனை கூலாக இருக்கிறது” , “ஃபிட்னஸை கையாள இதுதான் சிறந்த முறையாக இருக்கும்” , “வொர்க் அவுட் செய்து காசை மிச்சப்படுத்துவதோடு, கார், பைக் போன்றவற்றை பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலை காக்கவும் இது உதவும்” என்றெல்லாம் பதிவிட்டிருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com