romania former president candidate announces retirement from politics
காலின் ஜாா்ஜெஸ்குx page

ருமேனியா | முன்னாள் அதிபா் வேட்பாளா் காலின் ஜாா்ஜெஸ்கு அரசியலுக்கு முழுக்கு!

ருமேனியாவில் முன்னாள் அதிபா் வேட்பாளா் காலின் ஜாா்ஜெஸ்கு அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளாா்.
Published on

ருமேனியாவில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் அதிபா் தோ்தல் நடைபெற்றது. இத்த்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட காலின் ஜாா்ஜெஸ்கு, யாரும் எதிா்பாராத வகையில் முதலிடத்தைப் பிடித்து ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். தவிர, நாடு அளவிலும் அதிர்வலையை ஏற்படுத்தினார். ஆனால் எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெறாததால் முதல் இரு இடங்களைப் பிடித்த வேட்பாளா்களிடையே இறுதிச் சுற்றுத் தோ்தல் டிசம்பா் மாதம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் முதல்கட்ட வாக்குப் பதிவில் ரஷ்ய தலையீடு இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து ஒட்டுமொத்த தோ்தலையும் அரசியல் சாசன நீதிமன்றம் செல்லாததாக அறிவித்தது.

romania former president candidate announces retirement from politics
காலின் ஜாா்ஜெஸ்குx page

அதைத் தொடா்ந்து, கடந்த 4ஆம் தேதி மீண்டும் புதிய அதிபா் தோ்தல் நடைபெற்றது. எனினும், இந்தத் தோ்தலில் போட்டியிட ஜாா்ஜெஸ்குவுக்கு நீதிமன்றம் அனுமதி மறுத்தது. இந்தத் தோ்தலில் ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட நிக்யூசா் டான் வெற்றி பெற்றாா். அதையடுத்து, நாட்டின் 17-ஆவது அதிபராக அவா், கடந்த மே 26ஆம் தேதி பொறுப்பேற்றாா். இந்தச் சூழலில், அரசியலில் இருந்து முழுமையாக விலகி வெறும் பாா்வையாளராக மட்டுமே இருக்கப் போவதாக ஜாா்ஜெஸ்கு அறிவித்துள்ளார். இதுகுறித்து ஆன்லைனில் அவர், “பொது மற்றும் சமூக வாழ்க்கையைச் செயலற்ற பார்வையாளராக நான் தேர்வு செய்கிறேன். நான் அனைத்து அரசியல் கட்சி கட்டமைப்பிற்கும் வெளியே இருக்க முடிவு செய்துள்ளேன். நான் எந்த அரசியல் குழுவுடனும் எந்த வகையிலும் இணைந்திருக்க விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவிப்பு, ருமேனியா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

romania former president candidate announces retirement from politics
ருமேனியாவில் நடைபெற்ற பூனைத்திருவிழா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com