பூனைகளுக்காக ருமேனியாவில் ஒரு திருவிழா நடைபெற்றுள்ளது.
ஐரோப்பாவின் தென்கிழக்கு நாடு ருமேனியா. ஹங்கேரிகள், ருமானியர்கள் என கலவையான மக்கள் வாழும் நாடு இது. இந்த நாட்டில் பூனைகளுக்கான திருவிழா ஒன்று தலைநகரான புக்கரெஸ்ட்டில் நடைப்பெற்றது. அதில் 250-க்கும் மேலான பூனைகளுடன் அதன் உரிமையாளர்கள் தங்களின் செல்லப் பிராணிகளுடன் பங்கேற்றனர். விதவிதமான பூனைகள், விநோதமான பூனைகள் என பல்வேறு பூனைகள் வந்து அரங்கில் குவிந்திருந்தனர். அப்போது அவை தங்களின் எஜமானர்களுடன் செய்த சேட்டைகள் விழாவில் பங்கேற்றவர்களை மேலும் உற்சாகம் அடைய வைத்தது.