Robot copsweb
உலகம்
போர்க்களத்தில் மனிதர்களுக்குப் பதில் ரோபோ? உக்ரைன், அமெரிக்காவில் சோதனை!
எதிர்காலத்தில் போர்க்களங்களில் மனிதர்களுக்குப் பதிலாக மனித வடிவ ரோபோக்கள் ராணுவ வீரர்களாகக் களமிறங்கக் கூடும் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவைச் (San-Francisco) சேர்ந்த 'பவுண்டேஷன் (Foundaton) ரோபாட்டிக்ஸ்' (Robotics) நிறுவனம், 'பாண்டம்' (Phantom) என்ற பெயரில் இந்த ரோபோக்களை உருவாக்கி வருகிறது.
Robot copsweb
ஆபத்தான பகுதிகளுக்குச் சென்று உளவு பார்ப்பது, ஆயுதங்களை எடுத்துச் செல்வது மற்றும் காயமடைந்தவர்களை மீட்பது போன்ற பணிகளை இவை மேற்கொள்ளும். தற்போது இந்த ரோபோக்கள் உக்ரைன் மற்றும் அமெரிக்க ராணுவத்தால் சோதிக்கப்பட்டு வருகின்றன. மனித உயிர்களைக் காப்பதே இதன் நோக்கம் என்றாலும், இவற்றுக்கு ஆயுதங்களை வழங்குவது உலகளவில் புதிய தார்மீக விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

