‘மெல்ல விடை கொடு விடை கொடு மனமே...’ - வானத்தில் பறந்த காவலருக்கு பிரியாவிடை...

போலீஸில் இருந்து யூடியூபருக்கு வந்த போன் கால்.. பதறிப்போன யூடியூபரை சர்பரைஸ் கொடுக்க வைத்து நெகிழவைத்த காவல்துறை.. ஆகாயத்தில் பிரியாவிடை! எங்கு நடந்தது? முழு விவரத்தை பார்க்கலாம்.
youtuber with cop
youtuber with coppt

தங்களோடு பணியாற்றிவர்கள் ஓய்வு பெறும்போது, வித்தியாசமான முறைகளில் பிரியாவிடை கொடுப்பதை பார்த்திருப்போம். அப்படியொரு வித்தியாசமான பிரியாவிடைதான் இங்கும் நடந்துள்ளது. அதன்படி, காவலர் ஒருவருக்கு ஆகாயத்தில் வைத்து சர்ப்ரைஸாக பிரியாவிடை கொடுத்துள்ளனர் அவருடன் பணிபுரிந்த சக அதிகாரிகள்.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல யூடியூபர் ஒருவருக்கு காவல்துறையினரிடம் இருந்து சமீபத்தில் அழைப்பு வந்துள்ளது. தங்களது அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். அவரும் என்னவாக இருக்கும் என்று யோசித்துக்கொண்டே சென்றுள்ளார். காவல்துறையினரை சந்தித்தபோது, ‘ஓய்வுபெறும் அதிகாரிக்கு சர்பரைஸ் கொடுக்க வேண்டும்’ என்ற தங்களின் திட்டத்தை கூறியுள்ளனர். அதன்பின்னரே யூடியூபர் நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளார். ஹெலிகாப்டரை இயக்கத்தெரிந்த அந்த யூடியூபர் பொதுவாகவே தன் அனுபவங்களை யூடியூபில் வீடியோக்களாக பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்துதான் அவரை வைத்து சர்ப்பரைஸ் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், அவருடன் ஹெலிகாப்டரில் போகுமாறு ஓய்வுபெற இருந்த காவல் அதிகாரி டோனிக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தன்னை ஏதோ ஒரு வேலைக்காக அனுப்புகிறார்கள் என்று ஹெலிகாப்டரில் ஏறி பயணித்துள்ளார். அந்த நேரத்தில் ரேடியோகாலில் டோனியை அழைத்த அதிகாரிகள், இன்றோடு ஓய்வுபெறும் அவருக்கு வாழ்த்துகளை சொல்லி பிரியாவிடை கொடுத்துள்ளனர்.

வித்தியாசமான முறையில் இப்படி ஒரு சர்ப்ரைஸா என்று இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்த டோனி, யூடியூபருக்கு நன்றி சொன்னதோடு, தன்னுடைய சுவாரஸ்யமான அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். இச்சம்பவம் 2 தினங்களுக்கு முன்பு நடந்த நிலையில், வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் பலரும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் யூடியூபருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

youtuber with cop
மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் 20 |நடிப்பின் இலக்கணம் - காளையனாக வாழ்ந்த குரு சோமசுந்தரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com