\
IRGC commander Maj. Gen. Hossein Salami  & President Masoud Pezeshkian
IRGC commander Maj. Gen. Hossein Salami & President Masoud Pezeshkianweb

பதவி விலகிய ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்? IRGC கட்டுப்பாட்டில் ஈரான்?

IRGC-யின் ஆதிக்கம் காரணமாக ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் பதவி விலக முன்வந்ததாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது; ஆனால் அதிகாரிகள் இந்தத் தகவலை மறுத்துள்ளனர்.
Published on
Summary

ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அரசாங்கத்தின் முக்கிய முடிவெடுக்கும் அதிகாரங்களை கைப்பற்றியதாக குற்றம்சாட்டி, உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் அலுவலகத்தில் ராஜினாமா கடிதம் சமர்ப்பித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்தியாளர்: M.மீரா

இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அரசாங்கத்தின் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டதாகவும், முக்கிய விவாதங்களிலிருந்து தன்னை விலக்கிவிட்டதாகவும் கூறி, ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் பதவி விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன், உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் அலுவலகத்தில் தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார் என்று ஈரான் இன்டர்நேஷனல் வெளியிட்ட ஒரு செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

IRGC
IRGCweb

இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) அரசாங்கத்தின் முடிவெடுக்கும் முக்கிய பகுதிகளை திறம்பட தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டதால், ஜனாதிபதியும் மற்ற மூத்த அதிகாரிகளும் முக்கிய கலந்துரையாடல்களில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஈரான் இன்டர்நேஷனல் மேற்கோள் காட்டிய பெயர் குறிப்பிட விரும்பாத வட்டாரங்கள், ஈரான் சம்பந்தப்பட்ட சமீபத்திய மோதலைக் கையாண்ட விதம் மற்றும் அதன் பொருளாதார விளைவுகள் தொடர்பாக பெஷெஷ்கியனுக்கும் IRGC யின் தலைமைக்கும் இடையே விவாதங்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கின்றன.

போர் நிர்வகிக்கப்பட்ட விதம், மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் நாட்டின் பொருளாதாரம் மீது அது ஏற்படுத்திய அழிவுகரமான விளைவுகள் ஆகியவையே முக்கிய விவாதங்களாக இருந்ததாக அந்த வட்டாரங்கள் கூறின.

Masoud Pezeshkian
Masoud Pezeshkianweb

எனினும், ஜனாதிபதி அலுவலகத்தின் தகவல் தொடர்புத் துறை துணைத் தலைவர் மெஹ்தி தபதபாய், X தளத்தில் வெளியிட்ட பதிவொன்றில், 'ஈரான் இன்டர்நேஷனல்' (Iran International) வெளியிட்ட அறிக்கை "பொய்யானது" என்றும், போர்நிறுத்தம் குறித்த தற்போதைய பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் நடைபெறும் ஊடக விளையாட்டுகளின் ஒரு பகுதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

IRGC commander Maj. Gen. Hossein Salami  & President Masoud Pezeshkian
கறுப்புப் பட்டியலில் இஸ்ரேல், ரஷ்யா படைகள்.. நம்பமுடியாத அதிர்ச்சி அறிக்கை.! என்ன நடந்தது?

இதனிடையே பல மாதங்களாக நீடித்து வரும் போரில், ஈரானின் தலைமைத்துவக் கட்டமைப்பிற்குள் முடிவெடுக்கும் விதம் குறித்து கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

mojtaba khamenei
mojtaba khamenei x page

கடந்த வாரம், ஈரானின் உச்ச தலைவர் ஒரு ரகசிய இடத்திலிருந்து செயல்படுவதாகவும், வெளி உலகத்துடன் அவருக்கு நேரடித் தொடர்பு குறைவாகவே இருப்பதாகவும் அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்திருந்தனர். ஈரானிய அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளுக்குக் கூட அவரது இருப்பிடம் தெரியவில்லை என்றும், அவர்களால் அவருடன் நேரடியாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அதிகாரிகள் கூறியிருந்தனர்.

IRGC commander Maj. Gen. Hossein Salami  & President Masoud Pezeshkian
பாலஸ்தீன்| காசாவின் 70%-ஐ ஆக்கிரமிக்க உத்தரவிட்ட நெதன்யாகு.. அடுத்து என்ன நடக்கும்?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com