\
organism that is scientifically immortal
organism that is scientifically immortalReuters

சாகா வரம் பெற்ற உயிரினம் : திகைக்க வைத்த அரிய கண்டுபிடிப்பு... ஆச்சரியத்தில் மூழ்கிய ஆய்வாளர்கள் !

அறிவியல் ரீதியாக சாகா வரம் பெற்ற உயிரினத்தை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Published on: 
Summary

துரிட்டோப்சிஸ் டோர்னி எனும் ஜெல்லிமீன், தன் செல்களை மீண்டும் புதுப்பித்து சாகா வரம் பெற்ற உயிரினமாக மாறும் தன்மையைக் கொண்டது. இதன் டி.என்.ஏ-வில் உள்ள மரபணுக்கள், மனித உடலின் திசுக்கள் மற்றும் உறுப்புகளை மீளுருவாக்கம் செய்ய உதவக்கூடும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

கடந்த 1883-ஆம் ஆண்டு இத்தாலியின் நபோலி வளைகுடா பகுதியில் துரிட்டோப்சிஸ் டோர்னி (Turritopsis dohrnii) என அழைக்கப்படும் ஜெல்லிமீன் வகையை சேர்ந்த உயிரினம் முதல்முறையாக கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் சாதாரண ஜெல்லிமீன் இனத்தை சேர்ந்ததாகவே இது கருதப்பட்டது.

பின்னர் 1990-களில் இந்த ஜெல்லிமீன்கள் இனத்தை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இதன் செல்கள் மீண்டும் மீண்டும் தன்னை தானே சீர்படுத்திக்கொள்வது கண்டறியப்பட்டது. இந்த நிலையில், தற்போது இந்த ஜெல்லிமீன்களின் செல்களின் வளர்ச்சி குறித்த முக்கிய விவரங்கள் BBC Future இதழில் வெளியாகியுள்ளது.

Reuters

லூசி ஷெரிஃப் (Lucy Sherriff) எழுதியுள்ள இந்த கட்டுரையில், ஸ்பெயினின் ஒவியேடோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மரபியல் பேராசிரியரான கார்லோஸ் லோபஸ் மற்றும் ஒடின் (Carlos López-Otín) மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் விவரங்கள் வெளியாகியுள்ளது.

இந்த கட்டுரையில், இந்த ஜெல்லிமீனின் டி.என்.ஏ-வில் உள்ள சில முக்கிய சிறப்பம்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி பொதுவாக பெரும்பாலான உயிரினங்கள் பிறந்து, வளர்ந்து, முதிர்ச்சியடைந்து இறுதியில் மரணமடைகின்றன. ஆனால், இந்த ஜெல்லிமீன் காயமடையும் போதோ, அல்லது வயதாகும் போதோ தன் உடலின் முதிர்ந்த செல்களை மீண்டும் ஆரம்ப கட்ட நிலைக்கு மாற்றிக் கொள்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

Reuters

இந்த ஜெல்லி மீனின் செல்லில் டி.என்.ஏ சிதைவுற்றால் அதை உடனடியாகச் சரிசெய்யக்கூடிய மரபணுக்களின் கூடுதல் பிரதிகள் உள்ளன என்றும், இதன் காரணமாக வயது முதிர்வடையும் போது செல்கள் அழியாமல், தங்களை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளும் திறனைப் பெற்றுள்ளன என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதனால் மனித உடலில் பாதிக்கப்பட்ட திசுக்கள் மற்றும் உறுப்புகளை மீளுருவாக்கம் செய்ய ஜெல்லிமீனின் இந்த மரபணு நுட்பங்கள் உதவக்கூடும் என்றும், எதிர்காலத்தில் முதுமையடைவதை தடுக்கும் ஆய்வுகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இந்த ஜெல்லி மீன்கள் கடலில் பிற விலங்குகளால் வேட்டையாடப்படும் போதோ அல்லது நோய்தாக்கும் போதோ இறந்துவிடக்கூடும் என்றும் அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

organism that is scientifically immortal
ரொனால்டோவுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை: அதிர்ச்சி கொடுத்த கால்பந்து சங்கம்... கொதிக்கும் ரசிகர்கள்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com