\
Ronaldo banned due to disciplinary action
Ronaldo banned due to disciplinary actionReuters

ரொனால்டோவுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை: அதிர்ச்சி கொடுத்த கால்பந்து சங்கம்... கொதிக்கும் ரசிகர்கள்!

ஒழுங்கு நடவடிக்கை காரணமாக நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Published on: 
Summary

போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனம் ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடையும் அபராதமும் விதித்தது. பயிற்சியாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ரொனால்டோ அணியின் பயிற்சி முகாமிலிருந்து வெளியேறினார். இதனால் அவரது ஜெர்சி எண்ணை இளம்வீரர் ரஃபேல் லியோவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த முடிவுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கால்பந்து உலகின் மிகச்சிறந்த வீரரர்களில் ஒருவரான ரொனால்டோ போர்ச்சுகல் தேசிய அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். எனினும் சமீபத்தில் நடைபெற்ற யு.இ.எஃப்.ஏ நேஷன்ஸ் லீக் (UEFA Nations League) போட்டிகளின் போது, நார்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரொனால்டோ பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து, செப்டம்பர் 1-ம் தேதி டென்மார்க் அணிக்கு எதிரான அடுத்த ஆட்டத்திலும் அவர் தொடக்க வீரராக களம் இறக்கப்பட மாட்டார் என்று அறிந்ததும், போர்ச்சுகல் பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் (Jorge Jesus) உடன் ரொனால்டோவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் செப்டம்பர் 30 அன்று கோபன்ஹேகனில் இருந்த அணியின் பயிற்சி முகாமிலிருந்து ரொனால்டோ வெளியேறினார்.

Reuters

இதனைத் தொடர்ந்து ரொனால்டோவின் ஜெர்சி எண்ணான 7-ம் எண்ணை போர்ச்சுகல் கால்பந்து நிர்வாகம் இளம்வீரர் ரஃபேல் லியோவுக்கு (Rafael Leão) ஒதுக்கியது. இதன் காரணமாக ரொனால்டோ சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக செய்திகள் வெளியானது.

இதனிடையே ரொனால்டோ தனது தவறை ஒப்புக்கொண்டு, சக வீரர்கள் மற்றும் ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார். மேலும், சம்மேளனம் எடுக்கும் எந்தவொரு ஒழுங்கு நடவடிக்கை தண்டனையையும் ஏற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு (Disciplinary Council) வெளியிட்டுள்ள 28 பக்கங்கள் கொண்ட அறிக்கையில், ரொனால்டோவின் இந்தச் செயல் தீவிர ஒழுங்கீனம் எனக் குறிப்பிட்டு, அவருக்கு 30 நாட்கள் தடையும் 255 யூரோக்கள் அபராதமும் விதித்துள்ளது.

Reuters

போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனத்தின் இந்த தடை செப்டம்பர் 1-ம் தேதி நடைபெற்ற டென்மார்க் போட்டி நடைபெறும் நாளிலிருந்து அமலுக்கு வருகிறது. இதன் மூலம் அவர் ஏற்கனவே தனது தடையின் 19 நாட்களை அனுபவித்துவிட்டார். போர்ச்சுகல் அணி, நேஷன்ஸ் லீக் போட்டியில் மீண்டும் நவம்பர் 14 அன்று டென்மார்க்கை எதிர்கொள்ளும் நிலையில், இந்த தடையால் ரொனால்டோ எந்தப் போட்டியையும் தவறவிட மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தடை முடிவடைந்ததும் ரொனால்டோவை மீண்டும் தேசிய அணியில் சேர்க்க விருப்பம் உள்ளதாக போர்ச்சுகல் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தலைவர் பெட்ரோ புரோயென்கா (Pedro Proença) கூறியுள்ளார். எனினும் போர்ச்சுகல் கால்பந்து சம்மேளனதத்தின் இந்த முடிவுக்கு ரொனால்டோ ரசிகர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.

Ronaldo banned due to disciplinary action
என்ன ஆனது கிம் ஜாங் உன்னுக்கு? அதிகாரத்தை கையிலெடுத்த பெண் தலைவர்? முக்கிய தகவலை வெளியிட்ட வடகொரியா!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com