remove as thailands PM and what happens next
ஷினவத்ராஎக்ஸ் தளம்

தொலைபேசி விவகாரம்.. தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து நீக்கம்.. சூடுபிடிக்கும் தேர்தல்!

ஷினவத்ராவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on
Summary

ஷினவத்ராவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்க அந்நாட்டு அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.

தாய்லாந்து பிரதமரின் தொலைபேசி உரையாடல்

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்றது. இந்த நிலையில், கடந்த மே 28ஆம் தேதி இருநாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டது. இதில் கம்போடியா ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டனர். இந்தச் சூழலில், கடந்த ஜூன் 15ஆம் தேதி, தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவத் தளபதியை விமர்சிக்கும் வகையில் பிரதமர் ஷினவத்ரா பேசியுள்ளார். இது ஜூலை 24ஆம் தேதி தாய்லாந்து - கம்போடியா எல்லையில் ராணுவ வீரர்கள் பயங்கரமான மோதலுக்கு வழி வகுத்தது. இந்தச் சண்டை ஐந்து நாட்கள் நீடித்தன. அப்போது, டஜன் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 2,60,000க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். பின்னர் இருநாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டன.

remove as thailands PM and what happens next
ஷினவத்ராx page

பிரதமருக்கு எதிராக வெடித்த போராட்டம்

இதற்கிடையே, பேடோங்டர்ன் ஷினவத்ராவின் உரையாடல்கள் நாட்டில் கசிந்து அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிராக அதிருப்தி எழுந்தது. கம்போடியாவுடனான எல்லைப் பிரச்னையை கையாண்ட விதம், தொலைபேசி உரையாடல் எதிரொலியாக எதிர்ப்பலை கிளப்பியது. இதன் காரணமாக பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தலைநகர் பாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்தது. மேலும், தாய்லாந்து மன்னர் புதிய அமைச்சரவை அமைக்க ஒப்புதலும் வழங்கினார். அதேநேரத்தில், துணைப் பிரதமர் பும்தம் வெச்சாயாசாய், ஷிவத்ராவின் பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.

remove as thailands PM and what happens next
தாய்லாந்து | தொலைபேசி உரையாடலால் வெடித்த சர்ச்சை.. பிரதமரே சஸ்பெண்ட்! அப்படி யாரை பேசினார்?

பிரதமர் பதவியிலிருந்து நீக்க அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவு

இந்த நிலையில் ஷினவத்ராவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்க அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும் ராணுவம் அல்லது நீதித்துறையால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஷினவத்ரா பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால், தாய்லாந்தில் தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்படும் வரை தற்போதைய அமைச்சரவை ஓர் இடைக்கால அரசாங்கமாய் செயல்படும் என்று கூறப்படுகிறது. இடைக்கால அரசாங்கத்திற்கு, மன்னரின் ஒப்புதலுடன் புதிய தேர்தலை நடத்தும் வாய்ப்பும் உள்ளது.

remove as thailands PM and what happens next
ஷினவத்ராராய்ட்டர்ஸ்

தேர்தலைச் சந்திக்கும் தாய்லாந்து

பியூ தாய் கட்சியானது, ஏற்கெனவே இரண்டு பேரைக் களமிறக்கியுள்ளது. அதில் கடந்த ஆண்டு நீதிமன்றத்தால் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரெத்தா தவிசின் ஒருவர், மற்றொருவர் தற்போது பதவி நீக்கம் செய்யப்பட்ட ஷினவத்ரா. இந்த நிலையில், மூன்றாவது வேட்பாளராக கட்சியின் விசுவாசியும் முன்னாள் அமைச்சருமான 77 வயதான சாய்காசெம் நிதிசிரி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பூம்ஜைதாய் கட்சியைச் சேர்ந்த அனுதின் சார்ன்விரகுல் முக்கியப் போட்டியாளராக உள்ளார்.

remove as thailands PM and what happens next
தாய்லாந்து - கம்போடியா மோதல் | இருநாட்டு சண்டைக்கு ஒரு சிவன் கோயில்தான் காரணமா? விரிவாக பார்க்கலாம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com