thai prime minister paetongtarn shinawatra suspended
பேடோங்டார்ன் ஷினவத்ராx page

தாய்லாந்து | தொலைபேசி உரையாடலால் வெடித்த சர்ச்சை.. பிரதமரே சஸ்பெண்ட்! அப்படி யாரை பேசினார்?

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை பதவியிலிருந்து இடைநீக்கம் செய்து அந்நாட்டு அரசமைப்பு சாசன நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. இந்த நிலையில் தாய்லாந்து பிரதமர் பேதொங்தார்ன் ஷினவத்ரா கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன்சென்னுடன் தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். அப்போது தாய்லாந்து ராணுவத் தளபதியை ஷினவத்ரா விமர்சித்துள்ளார். இதுதொடர்பான உரையாடல்கள் கசிந்து நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் அரசியலிலும் புகைச்சலை உண்டாக்கியது.

thai prime minister paetongtarn shinawatra suspended
பேடோங்டார்ன் ஷினவத்ராஎக்ஸ் தளம்

மேலும் பிரதமர் ஷினவத்ராவுக்கு எதிராக அதிருப்தி எழுந்தது. இதன் காரணமாக பிரதமர் ஷினவத்ரா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இதனை வலியுறுத்தி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தலைநகர் பாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கிடையே தாய்லாந்து அமைச்சரவை அரசர் வஜிரலாங்கோர்ன் ஒப்புதலின் பேரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

thai prime minister paetongtarn shinawatra suspended
தாய்லாந்து | மறுக்கப்பட்ட மருத்துவ விடுப்பு; பரிதாபமாக உயிரிழந்த பெண் ஊழியர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com