"அடித்து துன்புறுத்தினர்"- மனைவி மற்றும் மகன் மீது புகார் கூறிய ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர்

ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், பரத்பூர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவருமான விஸ்வேந்திர சிங், தன்னை தனது மகனும் மனைவியும் கொடுமைப்படுத்தியதாகக் கூறி மனுத் தாக்கல்
விஸ்வேந்திர சிங், மனைவி மற்றும் மகன்
விஸ்வேந்திர சிங், மனைவி மற்றும் மகன்புதிய தலைமுறை

ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் அமைச்சரான விஸ்வேந்திர சிங் தனது மனைவி திவ்யா சிங் மற்றும் மகன் அனிருத் சிங் ஆகியோருக்கு எதிராக புகார் ஒன்றை அளித்துள்ளார். அப்புகாரில்,

“எனது மனைவியும், எனது மகனும் என்னை சொத்துக்காக அடித்து துன்புறுத்துகின்றனர். நான் ஒரு இருதய நோயாளி.. ஆகையால் சிறு டென்ஷனைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. 2021-22-ம் ஆண்டில் எனக்கு கொரோனா வந்த சமயம் எனது மனைவியும் எனது மகனும் என்னை கவனித்துக்கொள்ளவில்லை. எனக்கு பணிபுரிந்து வந்த வேலையாட்களை கூட நிறுத்திவிட்டனர். ஆனால் எனது தந்தையின் சொத்துகளில் உரிமை கோருகின்றனர். அத்துடன் நிறுத்தாமல் எனது அறைகளிலிருந்து பொருட்களை வெளியே எறிந்ததுடன், எனது ஆடைகளுக்கு தீ வைத்து கொளுத்தினர்.

எனது ஆவணங்கள் பதிவுகள் ஆகியவற்றை கிழித்து கிணற்றில் எறிந்தனர். எனக்கு உணவு, தண்ணீர்கூட கொடுக்காமல், என்னை அடித்து துன்புறுத்தினர். என் தொகுதியிலிருப்பவர்கள் என்னை பார்ப்பதற்கும், நான் வெளியே செல்வதற்கும் இவர்கள் அனுமதிப்பதில்லை. ஆகவே எனது மனைவி மற்றும் மகனால் என் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

விஸ்வேந்திர சிங், மனைவி மற்றும் மகன்
இந்தோனேஷியாவில் தடம்பதிக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை!

ஆகையால் நான் வீட்டிலிருந்து வெளியேறி அரசு விடுதி மற்றும் ஹோட்டலில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில சமயங்களில் அரசு இல்லத்திலும், சில சமயம் ஹோட்டலிலும் வசித்து வருகிறேன். வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை விட்டுச்சென்றுள்ளேன்.. நான் கொடுத்த ரூ.912 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி ரத்தினங்கள் ரூ.25 லட்சம் மதிப்புள்ள நகைகள் அனைத்தும் எனது மனைவி திவ்யா சிங்கிடம் உள்ளது. மனைவி மற்றும் மகனிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகளையும் மீட்க வேண்டும்” என்று துணை பிரிவு அதிகாரி தீர்ப்பாயத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்

இந்நிலையில், விஸ்வேந்திர சிங்கிற்கு எதிராக அவரது மகன் அனிருத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், தனது தந்தை கூறும் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என்றும், நிதி மோசடி மற்றும் சொத்துகளை அவர் முறைகேடாக விற்பனை செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவர் கூறினார். தேவைப்பட்டால், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என்று அனிருத் சிங் கூறினார்.

விஸ்வேந்திர சிங்
விஸ்வேந்திர சிங்ani

பரத்பூரின் முன்னாள் அரச குடும்பத்துக்கு இடையே கடந்த நான்கு ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது. இதன் காரணமாக, முன்னாள் அரச குடும்ப உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சருமான விஸ்வேந்திர சிங், மோதி மஹாலுக்குப் பதிலாக வேறு தனியார் குடியிருப்புகளில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com