இந்தோனேஷியாவில் தடம்பதிக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை!

இந்தோனேசியாவில் இணையசேவை வழங்கும் முன்னணி நிறுவனமான டிரான்ஸ்ஸீவர், குறுகிய தூரத்துக்கு மட்டுமே பயனளிப்பதால் பல்வேறு தீவுகள் சிரமத்தை எதிர்கொள்கிறது.
எலான் மஸ்க்
எலான் மஸ்க்கூகுள்

எலான் மஸ்க்-கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையசேவை பாலித் தீவிலும் தடம் பதிக்கிறது. இதன் முக்கியத்துவம் மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் சமூக ஊடக தளமான எக்ஸ்-ன் உரிமையாளர். உலகின் பெரும் பணக்காரர்... இதுவே எலான் மஸ்க்-ன் முகம்... இவர் தற்போது உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டங்களை கொண்ட நாடான இந்தோனேசியாவில் தடம் பதித்துள்ளார். தனது ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவையை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். பாலியின் தலைநகர் டென்பசாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எலான் மஸ்க்குடன் இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோவும் பங்கேற்றார்.

அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தோனேசியாவில், தொலைதூரப் பகுதிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவது என்பது சவால்கள் நிறைந்ததாக பார்க்கப்படுகிறது. சுகாதாரம், கல்வி மற்றும் கடல்சார் துறைகளில் உள்ள பிரச்னைகளுக்கு உதவ ஸ்டார்லிங்கின் இணையசேவை தேவைப்படுவதாக, கடல்சார் மற்றும் முதலீட்டுத்துறை அமைச்சர் LUHUT BINSAR PANDJAITAN கூறுகிறார்.

இந்தோனேசியாவில் இணையசேவை வழங்கும் முன்னணி நிறுவனமான டிரான்ஸ்ஸீவர், குறுகிய தூரத்துக்கு மட்டுமே பயனளிப்பதால் பல்வேறு தீவுகள் சிரமத்தை எதிர்கொள்கிறது. அதேநேரத்தில் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள்கள் வேகமான இணையசேவையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எலான் மஸ்க்
620 ஏக்கர் பரப்பளவு! மொத்த கிராமத்தையே விலைக்கு வாங்கிய குஜராத் அரசு அதிகாரி.. கவலையில் ஆர்வலர்கள்!

இந்தோனேசியாவில் டிஜிட்டல் உள்கட்டமைப்பில் உற்பத்தி மற்றும் முதலீடு செய்வதில் ஆர்வத்தை வெளிப்படுத்திய ஆப்பிள் சிஇஓ டிம்குக் மற்றும் மைக்ரோசாப்ட் சிஇஒ சத்யா நாதெல்லா ஆகியோரின் சமீபகால வருகைகளின் பின்னணியில் எலான் மஸ்க்-கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையசேவை முக்கியத்துவம் பெறுகிறது. இந்த முன்னெடுப்புகள் அனைத்தும் 'கோல்டன் இந்தோனேசியா 2045' என்ற தொலைநோக்கு பார்வையுடன் ஒத்துப்போவதாக பார்க்கப்படுகிறது.

இந்தோனேசியாவின் சுதந்திர நூற்றாண்டு விழாவின்போது உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக நாட்டை உயர்த்துவதை நோக்கமாக கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.

இந்தியாவிலும் தனது தடத்தை பதிக்க முயற்சிக்கும் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் இணையசேவை, ஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க், போர்ச்சுகல், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ளது. ஸ்டார்லிங் என்பது பல ஆயிரம் செயற்கைக்கோள்களை உள்ளடக்கியது. பூமிக்கு மிக நெருக்கமான கீழ் வட்டப்பாதையில் வெறும் 550 கிலோ மீட்டர் தொலைவில்தான் சுற்றி வருகிறது.

மற்றவற்றுடன் ஒப்பிடும்போது ஸ்டார்லிங் செயற்கைக்கோள் மிகவும் தாழ்வாக இருப்பதால் அதிகவேகமாக இணைய இணைப்பை வழங்க முடிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com