தீப்பிடித்து எரிந்த ரஷ்ய அதிபரின் கார்
தீப்பிடித்து எரிந்த ரஷ்ய அதிபரின் கார்முகநூல்

தீப்பிடித்து எரிந்த ரஷ்ய அதிபரின் கார்! ஜெலென்ஸ்கியின் கணிப்பு உண்மையா? பகீர் சம்பவம்

என்ன நடந்தது விரிவாகப் பார்க்கலாம்.
Published on

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினின் இறப்பு குறித்து கணிப்பு ஒன்றை கூறியிருந்தார். இதற்கிடையில் புதினின் சொகுசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய அதிபர் புதினின் அதிகாரப்பூர்வ கார் குழுவில் இருந்து ஒரு சொகுசு லிமோசின் கார் மத்திய மாஸ்கோ பகுதியில் வெடித்ததாக செய்தி வெளியானது. இந்த சம்பவம் புதினின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பி இருக்கிறது.

UK tabloid Express வெளியிட்ட தகவலின்படி, இந்த வாகனம் புதினின் Presidential Property Management Department -க்கு சொந்தமானது மற்றும் இது $357,000 மதிப்புள்ள ஆரஸ் செனட் ஆகும். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 3 கோடியாகும்.

ரஷ்யாவின் அரசியலில் முக்கிய அடையாளமான £275,000 மதிப்புள்ள ஆரஸ் செனட், லுபியங்காவில் உள்ள FSB தலைமையகத்திற்கு அருகில் தீப்பிடித்து எரிந்தது. விபத்து குறித்து நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, தீ முதலில் என்ஜினில் தொடங்கி விரைவாக காருக்குள் பரவியதாக தெரிவித்தனர். Emergency services வருவதற்கு முன்பு அருகிலுள்ள உணவகங்களைச் சேர்ந்த மக்கள் காரின் தீயை அணைக்கும் முயற்சியில் உதவிக்கு விரைந்தனர். வாகனத்திலிருந்து கருப்பு புகை எழுவதையும், காரில் ஏற்பட்ட சேதத்தையும் வீடியோக்கள் மூலம் காண முடிந்தது. விபத்துக்கான காரணம் குறித்து தற்போதுவரை தகவல் தெரியவில்லை. அதே நேரத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

புதினின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக வதந்திகள் பரவி வரும் நிலையில், நடந்து வரும் போரில் ரஷ்யா குறிப்பிடத்தக்க பின்னடைவைச் சந்திக்க நேரிடும் என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமீபத்தில் கூறியது பேசுபொருளானது.

தீப்பிடித்து எரிந்த ரஷ்ய அதிபரின் கார்
மின்னல் தாக்குதலில் நிறம் மாறிய கண்கள் | அனுபவம் பகிரும் ஆஸி. பெண்!

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி சமீபத்தில் நடந்து வரும் போர் குறித்து கருத்தொன்றை கூறியிருந்தர். அதாவது "புதின் விரைவில் இறந்துவிடுவார்" என குறிப்பிட்டார். ஜெலென்ஸ்கி இவ்வாறு கூறிய சில நாட்களில் புதினின் சொகுசு கார் வெடித்து இருப்பது பேசுபொருளாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com